"லைவ்ல பாடறது கஷ்டம்!" ஆனால் பாடகர் கார்த்திக்கையே எழுந்து நிற்க வைத்த சபேசன்! சரிகமபவில் நெகிழ்ச்சி
சென்னை: ஜீ தமிழில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இசை ரியாலிட்டி ஷோவான 'சரிகமப', தற்போது இறுதி கட்டத்தை நோக்கி மிக விறுவிறுப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் கொடுக்கும் அதிரடியான பெர்ஃபார்மன்ஸ்கள், நடுவர்களையும் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன. இந்தச் சூழலில், இந்த வாரம் நடந்த ஃபோக் சுற்றில், இலங்கையைச் சேர்ந்தப் பாடகர் சபேசன் கொடுத்த ஒரு பிரத்யேகப் பெர்ஃபார்மன்ஸ், ஒட்டுமொத்த அரங்கத்தையும் நெகிழ வைத்துள்ளது.

சபேசனின் மாயாஜாலம்
இந்த வாரம் 'சரிகமப' நிகழ்ச்சியில் பல கோல்டன் பெர்ஃபார்மன்ஸ்கள் இடம் பெற்றிருந்தன. இருப்பினும், இலங்கையை சேர்ந்த போட்டியாளரான சபேசன் பாடிய பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சபேசன் பாடிய பாடல், நடுவரும், பிரபல பாடகருமான கார்த்திக் பாடிய "உசிரே போகுது உசிரே போகுது" என்றப் பாடலாகும்.
நடுவரின் நெகிழ்ச்சி
சபேசனின் சிறப்பான பாடும் திறமையைக் கண்டு, அந்தப் பாடலை திரைப்படத்தில் பாடிய நடுவர் கார்த்திக்கே அரங்கத்தில் எழுந்து நின்றுப் பாராட்டினார். "இந்தப் பாடலை 'லைவ் இல் பாடுவது மிகவும் கடினம்; நீ சிறப்பாகப் பாடினாய்'" என்றுப் பாடகர் கார்த்திக், சபேசனைப் புகழ்ந்து பேசியது, அங்கிருந்த அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
ஃபைனலிஸ்ட் ரேஸ்
சரிகமப நிகழ்ச்சி தற்போது இறுதிச் சுற்றை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், ஒவ்வொரு போட்டியாளரின் தேர்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது வரை, சுஷாந்திக்கா மற்றும் ஸ்ரீஹரி ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.
இந்த வாரம் நடந்த ஃபோக் சுற்றில், மூன்றாவது இறுதி சுற்று போட்டியாளர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். சபேசனின் சிறப்பானப் பெர்ஃபார்மன்ஸைக் கண்ட ரசிகர்கள், தற்போது மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக சபேசன் வருவாரா, இல்லையா என்று ஆர்வத்துடன் காத்து கொண்டிருந்தனர் கடைசியில் சபேசன் மற்றும் பவித்ரா இருவருக்கும் இடையிலான போட்டியில் சபேசன் தான் மூன்றாவது போட்டியாளராக தேர்வாகி இருக்கிறார்.
.
ஒவ்வொரு வாரமும் ஆச்சரியமூட்டும் சுவாரசியமானப் போட்டிகளும், நடுவர்களின் பாராட்டும் இந்தச் சீசனுக்குப் பெரிய வரவேற்பைக் கொடுத்து வருகின்றன. இனி வரவிருக்கும் எபிசோடுகளில் யார் யார் இறுதிச் சுற்றுக்குப் போகப் போகிறார்கள், யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சீசனில் யார் தான் டைட்டில் வெற்றி பெறுவார்கள் என்று யூகிக்க முடியாத அளவில் ஒவ்வொரு போட்டியாளர்களும் பட்டை தீட்டப்பட்ட வைரம் போல ஜொலிக்கிறார்கள். ரசிகர்களின் மனதிற்கு வியப்பை ஏற்படுத்தும் வகையிலையே பாடல் பாடி பலரின் மனங்களை வென்று கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications