பள்ளிக்கட்டு சபரிமலைக்கு.. சரிகமபவில் கண்முன் வந்த ஐயப்பன்.. காலில் விழுந்த பாடகர் வீரமணி
சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் மண்வாசனை சுற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் பக்தி பாடல்களுக்கான சுற்று நடைபெறுகிறது. அதில் ஒரு போட்டியாளர் “பள்ளிக்கட்டு சபரிமலைக்கு சுவாமியே ஐயப்பா” என்ற பாடலை பாட அங்கு குட்டி ஐயப்பனாக வந்த குழந்தையை பார்த்து அரங்கத்தில் எல்லோரும் சிலிர்த்துப் போய் இருக்கிறார்கள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டுடன் மக்களை கவர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் சோலோவாகவும் ஜோடியாக இணைந்தும் பக்தி பாடல்களை தேர்வு செய்து பாட உள்ளனர்.
இந்த பக்தி பாடல்கள் ரவுண்ட் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த ரவுண்டில் முழுமையாக நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரிகமப மேடையில் அப்பா காலில் விழுந்துட்டாரு.. சொந்தக்காரங்க கேட்ட கேள்வி இருக்கே! மனம் திறந்த ஸ்வேதா
அதாவது பக்தி பாடல்களை பாடி பெரிய அளவில் பாப்புலரான வீரமணி ராஜு, மஹாலிங்கம் மற்றும் மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். முகேஷ், சரத், ஸ்வேதா, விஜய் லோஷன், சரண், இந்திரஜித் ஆகியோர் கோல்டன் ஷவரை தட்டி செல்ல ஜெய பார்கவி, மகிழன் மற்றும் அமன் ஆகியோர் பிளாட்டினம் பெர்ஃபாமன்ஸ் ஷவரை பெற்றுள்ளனர்.

ரியல் பெருமாள் சிலை, அம்மன் கெட்டப், அய்யப்பன் கெட்டப் என பிரம்மிக்க வைக்கும் வேடங்களில் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளனர். பாடலை கேட்பவர்கள் சாமி வந்து ஆடும் அளவிற்கு பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸை கொடுத்துள்ளார் சௌமியா.
பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் சரிகமப நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் சீசன் பெரிய அளவில் ரசிகர்களை உணர்வு பூர்வமாக பரவச நிலை அடைய வைக்கும். மதத்தை தாண்டி சில பாடல்கள் பலருடைய மனதை கவர்ந்து விடும். அந்த மாதிரி பாடல்களை உணர்வு பூர்வமாக போட்டியாளர்கள் பாடி இருக்கும் நிலையில் பலர் பாடலை கேட்டு மெய் மறந்து போயிருக்கின்றனர்.

அதிலும் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற பாடலை போட்டியாளர் ஒருவர் பாடியதை கேட்டு இந்த பாடலை பாடிய வீரமணி ராஜு அங்கு ஐயப்பன் சிலை போல இருந்த குழந்தையின் காலில் விழுந்து இந்த பாடல் எங்களுக்கு இந்த தலைமுறையினரும் பாடும் அளவிற்கு ஃப்ரஷ் ஆக இருக்கிறது என்றால் அது ஐயப்பன் போட்ட பிச்சை தான் என்று அவர் பேசி இருக்கிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications