பைனலுக்கு முன்னேற போகும் அடுத்தடுத்த போட்டியாளர்கள்! சரிகமப-ல் இந்த வாரம் சர்ப்ரைஸ் சம்பவம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
இதுவரை கடந்த மூன்று வாரங்களில் 3 பேர் பைனலிஸ்ட் போட்டியாளர்களாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் விலேஜ் போல்க் ( Village Folk ) ரவுண்ட் நடைப்பெற உள்ளது.

இந்த ரவுண்டில் போட்டியாளர்கள் கிராமத்தை மையமாக கொண்ட பாடல்களை தேர்வு செய்து பாடி அசத்த உள்ளனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஷரத், அமன், சரண் என மூன்று போட்டியாளர்களில் இறுதி சுற்றுக்கு முன்னேற போவது யார் என நடுவர்கள் அறிவிக்க உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சுற்றில் போட்டியாளர்களைப் போலவே நடுவர்களும் கிராமத்து கெட்டப்பில் வந்திருக்கிறார்கள். அதிலும் இந்த ரவுண்டில் சரண் பாடிய "புத்தம் புது பாட்டு எடுத்து தாண்டவ பூமி" என்ற பாடல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதுபோல இந்த ரவுண்டில் எல்லா போட்டியாளர்களுமே சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் புஷ்பவனம் குப்புசாமியை மட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்களையும் மெய்மறக்க வைத்திருக்கிறார்கள்.
இதுவரை வாரத்திற்கு ஒரு போட்டியாளர் பைனலுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் பைனலுக்கு செல்ல இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுவும் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக ஐந்தாவது போட்டியாளர் தேர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது.
பைனலிஸ்ட் போட்டியாளராக இறுதி சுற்றுக்கு முன்னேற போகும் அந்த போட்டியாளர்கள் யார் யார்? என்பதை அறிந்து கொள்ள சரிகமப நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications