எனக்கு இப்போ யாரும் இல்லையே! மேடையில் கண்கலங்கி அழுது தேவா! கையெடுத்து கும்பிட்ட பாடகர் சரண்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.
மேலும் அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி சரண், ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் சரிகமப ரேட்டிங் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுபோல ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் ஒரு ரவுண்டு நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் விஜய்காந்த்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய ஹிட் பாடல்களை குழந்தைகள் பாடியிருந்தார்கள்.
அதுபோல எஸ்பிபியின் பாடல்களையும் குழந்தைகள் பாடியிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் பக்தி ரவுண்டில் குழந்தைகள் பாடிய பாடல்கள் பலரையும் பரவசப்படுத்தியது. அதுபோல கிராமத்து மண்வாசனை என்ற ரவுண்டு வரும்போது குழந்தைகள் பழைய பாடல்களை தேர்ந்தெடுத்து பாடியது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுபோல கிராமத்து ரவுண்டில் நடுவர்களாக இருக்கும் ஸ்வேதா மோகன், சைந்தவி, ஸ்ரீநிவாஸ், எஸ் பி பி சரண் மற்றும் தொகுப்பாளர் அர்ச்சனா என எல்லோருமே கிராமத்து கெட்டப்பில் வந்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த வாரம் இன்னிசை தென்றல் தேவாவின் 35 வருட இசைப்பயணத்தை போற்றும் ஒன் அண்ட் ஒன்லி தேவா சுற்று நடைபெற உள்ளது. இசையமைப்பாளர் தேவா சிறப்பு விருந்தினராக பங்கேற்க போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தேவாவின் பாடல்களை தேர்வு செய்து பாடி அசத்த உள்ளனர். இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.
அதிலும் ஒரு சிறுவன் “வியாபாரி” திரைப்படத்தில் இடம்பெற்ற தேவாவின் “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?” என்ற பாடலை பாடியிருக்கிறார். அதை கேட்டதும் தேவா கண்கலங்கி அழுது இருக்கிறார். அதோடு தன்னுடைய அம்மாவை அந்த மேடையில் நினைவு கூர்ந்து இருக்கிறார்.

தன்னுடைய அம்மாவின் பெயர் கிருஷ்ணவேணி, நீங்கள் எல்லாரும் கூப்பிடுற மாதிரி அவங்க என்னை தேவா சார் என்று கூப்பிட மாட்டாங்க. ய்யயா தேவா.. என்று கூப்பிடுவாங்க. இப்போ அப்படி கூப்பிட எனக்கு யாரும் இல்லையே..! நான் இன்னைக்கு நல்ல நிலைமையில் இருந்தாலும் எங்க அம்மாவால் அதை பார்க்க முடியலையே என்று கண் கலங்கி குழந்தை போல அழுதது பார்ப்பவர்களையும் பீல் பண்ண வைத்திருக்கிறது.
அதுபோல இன்னொரு ப்ரோமோவில் குழந்தைகள் எல்லோரும் பாடி ஆடியதை பார்த்து தேவா சந்தோஷப்பட, அதற்கு பாடகர் சரண் ஐயா நீங்கள் இந்த ஜெனரேஷனையும் ஆட வைத்துக் கொண்டு இருக்கீங்க. அந்த அளவிற்கு இளமையான பாடல்களை கொடுத்து இருக்கீங்க என்று கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார்.
மேலும் இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை என தொடர்ந்து 3 மணி நேர இசை கொண்டாட்டமாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications