பூஜை பண்ணி முடிச்சதுமே.. சரோஜா தேவியின் கடைசி நிமிடங்கள். பல மாயையை சினிமாவில் நொறுக்கிய சரோஜாதேவி
சென்னை: அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவருமே சரோஜாதேவியின் பெருமைகளை கூர்ந்தும் வருகிறார்கள்.. பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்திலுள்ள அவரது வீட்டில் பொதுமக்களும் திரண்டு வந்து மரியாதை செலுத்திய நிலையில், அவரது சொந்த ஊரான ராம்நகரா மாவட்டம் தஷ்வாரா கிராமத்தில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக கர்நாடகாவின் மூலை முடுக்கிலிருந்தும் ரசிகர்கள், சரோஜாதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சரோஜாதேவி.. சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்..

இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவராவார்..
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். குறிப்பாக எம்ஜிஆருடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்.
கலைஞர் எழுத்து
ஒரு பேட்டியில் சொல்கிறார், "நான் நடிச்ச படங்களிலேயே எனக்கு பிடித்த கேரக்டர்ன்னா 'இருவர் உள்ளம்' படத்தில் நடித்ததுதான். நல்லப்படம் மட்டுமில்லை, எனக்கு ரொம்ப பாராட்டுகளை குவித்த படமும்கூட.. இந்தப் படத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்தான் திரைக்கதை, வசனம் எழுதினார். அவர், எழுதின டயலாக்கைதான் நான் பேசி நடிச்சேன். படம் ரிலீஸுக்கு அப்புறம் படத்தை பார்த்துட்டு ரொம்ப நல்லா நடிச்சிருக்கன்னு கலைஞர் பாராட்டினார். கலைஞரின் எழுத்து, பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று நெகிழ்ந்து கூறியிருந்தார்.
காலம் தவறாமை
எப்போதுமே ஷூட்டிங்கில் ஒழுங்கு, காலம் தவறாமை போன்றவற்றுக்கு புகழ்பெற்றவர் சரோஜாதேவி.. அன்றைய ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். அதாவது, சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை உடைத்தெறிந்த நடிகை சரோஜாதேவி.. திருமணத்துக்குபிறகு நடித்த படங்கள்தான், பெரும் பெயரையும், விருதுகளையும் சரோஜாதேவிக்கு பெற்று தந்தது.
முன்னணி நடிகை
சினிமாவுக்காகவே டான்ஸ் கற்றுக் கொண்டார். சினிமா படங்களில் நீச்சல் உடைகள் மற்றும் அரைகுறை ஆடைகள் அணிவதை தவிர்த்தவர்.. கிட்டத்தட்ட17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தவர் சரோஜாதேவி..
தினமும் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் படிப்பாராம் சரோஜாதேவி. பிறகு குளித்துவிட்டு பூஜை செய்வார். அதன் பிறகே காலை உணவு சாப்பிடுவாராம்.. நேற்றும் வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம்.. அப்போதுதான் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றும், காப்பாற்ற முடியவில்லை என்று அவரது மேனேஜர் விஜயகுமார் கூறியிருந்தார்.
இன்று நல்லடக்கம்
சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. பெங்களூருவில் சரோஜாதேவி இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.. இதையடுத்து, பிறகு சொந்த ஊரான ராம்நகரா மாவட்டம் தஷ்வாரா கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் என்பதால், பொதுமக்கள் மல்லேஸ்வரத்தில் குவிந்துவிட்டார்கள்.. சரோஜா தேவியின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications