பாக்கியலட்சுமி சீரியலில் இனி நடக்கப்போவது இதுதானா? வீட்டை விட்டு வெளியேறும் கோபி! அப்போ அந்த லெட்டர்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற க்ளூ தரும் வகையில் கோபியாக நடிக்கும் சதீஷ் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பாக்யாவிற்காக தான் உருக்கமாக எழுதிய கடிதத்தை கோபி படித்து பார்த்திருந்த நிலையில் அடுத்த முடிவு பற்றி அப்டேட் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு பிரச்சனைகளாக முடிவுக்கு வந்திருக்கிறது. அதுபோல பாக்கியாவிற்கு இத்தனை நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டு இருந்த கோபியும் மனம் மாறி இருக்கிறார். பாக்யாவை பற்றி முழுமையாக புரிந்து கொள்கிறார்.

கோபியின் மனமாற்றத்தை பார்க்கும் போது கோபியும் பாக்யாவும் இனி சேர்ந்து வாழ்வார்களா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று பாக்கியா நேற்றைய எபிசோடில் கூறிவிட்டார்.

ஆனாலும் இன்றைய எபிசோடில் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்றது. அதாவது பாக்யாவிற்கு கோபி கொடுத்த கிப்ட் பாக்யா பிரித்துக் கூட பார்க்காமல் அதை ஷோகேஸில் போட்டு வைத்திருந்தார். அதை இன்று பார்த்த கோபி அந்த பார்சலை பிரித்து அதில் தான் உருக்கமாக எழுதி இருந்த கடிதத்தை படித்திருந்தார்.

அதில் தான் இதுவரைக்கும் பாக்கியாவிற்கு ஒருமுறை கூட பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லாதது குறித்து வருத்தத்தை தெரிவித்து இருந்தார். அதோடு பாக்கியாவை தான் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளாமல் அவரை ஒவ்வொரு இடத்திலும் அசிங்கப்படுத்தி வந்தாலும் பாக்கியா இன்று வளர்ந்து பலருக்கு உதவி செய்து வருவது, தன்னுடைய குடும்பத்தினரை கவனித்து வருவது குறித்து நெகிழ்ந்து பேசி இருந்தார்.

அதோடு அந்த கடிதத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு போய்விட்டார். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாக்கியா கோபியை இனி நான் திருமணம் செய்து கொள்ள முடியாது, அவரோடு சேர்ந்து வாழும் எண்ணம் எனக்கு துளிகூட கிடையாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கமெண்ட் பெற்று வருகிறது.

அதாவது சதீஷ் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அடிக்கடி அப்டேட் கொடுக்கும் விதமாக போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் தான் இப்போது தான் புதியதாக ஒரு கிராம வீட்டில் ஒன்றில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் பகிர்ந்து இருக்கிறார். இதனால் கோபி பாக்யா வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய சொந்த ஊர் கிராமத்திற்கு வருவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே இனியா மற்றும் ஆகாஷ் காதல் பிரச்சனை அடுத்ததாக பாக்யா வீட்டில் பூகம்பமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு கோபி வீட்டை விட்டு போவது போன்ற காட்சிகள் தான் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications