கட்டிட தொழிலாளியான விஜய் டிவி சீரியல் நடிகை.. எதிர்நீச்சல் ஆதிரையின் எதிர்பாராத மாற்றம்! நெகிழ வைத்த வீடியோ
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்த பிரபலம் அடைந்த நடிகை சத்யா தேவராஜன் தற்போது கட்டட வேலை செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் என்னாச்சு இவர் எப்படி மாறிவிட்டாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோவுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை பற்றி சத்யா தேவராஜன் பகிர்ந்து இருக்கும் நிலையில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களை அந்த கேரக்டராகவே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அது போல தான் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்த நடிகை சத்யா தேவராஜனை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆரம்பத்தில் அண்ணிமார்களை கொடுமைப்படுத்தும் ஆதிரை பிறகு அண்ணிமார்களின் தயவால் தான் பல தைரிய மன முடிவெடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் அண்ணன் பக்கம் சாய்ந்து விட்டது ரசிகர்களை வருத்தம் அடைய செய்ய வைத்தது.

தனம் சீரியல் கதை
ஆனாலும் இந்த சீரியலில் சத்யா தேவராஜன் தடுத்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு விஜய் டிவியில் தனம் சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் ஆட்டோ ஓட்டும் கதாநாயகனை காதலித்து குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் சில மாதங்களில் கதாநாயகன் இறந்து விடுகிறார். அதற்கு பிறகு கதாநாயகனின் குடும்பத்தை தனம் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
கட்டிட தொழிலாளி
இப்படியாக கதை போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் தான் சத்யா தேவராஜன் கட்டிட வேலை செய்யும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் இவர் உண்மையாகவே கல் தூக்கி வேலை செய்யும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து இருக்கிறார். நாம சூட்டிங்காக பார்த்து பார்த்து வேலை செய்யும் போது கையில் அடிபடுகிறது ஆனால் இதில் உண்மையாகவே வேலை செய்பவர்களின் நிலைமை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
நடிப்பிற்காக உழைப்பு
ஆனாலும் நான் இந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்த வேண்டும் என்பதற்காக சில நாட்கள் இந்த வேலையை முறையாக பார்த்து கற்றுக் கொண்டேன். இதனால் பலருடைய வலி வேதனை தெரிந்தாலும் இந்த வேலையை பார்க்கும்போது கையில் அடிபட்டு இருந்தது. ஆனாலும் மக்கள் நம்மளை ஏற்றுக் கொள்வார்கள் என்று அந்த வீடியோவிற்கு சத்யா தேவராஜன் கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

சத்யா தேவராஜன் நடித்த சீரியல்கள்
நடிப்பு என்றாலும் அதற்கு தகுந்த மாதிரி வேலை செய்வது போலவே நடிக்காமல் இவர் உண்மையாகவே வேலை செய்திருக்கிறார். அதிலும் கஷ்டப்படுகிறவர்களின் அருமையும் இவருக்கு தெரிந்திருக்கிறது என்று பலர் பாராட்டி வருகிறார்கள். சத்யாதேவராஜன் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான அருவி சீரியலில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு அந்த சீரியலை விட்டு விலகி விட்டு எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் சன் டிவியில் தனம் சீரியலில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் சில வாரங்களாக பெரிய அளவில் ஆதிரை கேரக்டர் அதிகமாக காட்டப்படவில்லை.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications