எதிர்நீச்சல் 2வில் நான் இல்ல! அதிரடி போஸ்ட் போட்ட விசாலாட்சி.. இவங்களுமா இப்படி! அட காரணம் இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் நடித்த சத்ய பிரியா நேற்று எதிர்நீச்சல் 2 சீரியலில் நான் நடிக்கவில்லை என்றால் நீங்கள் எல்லோரும் ஃபீல் பண்ணுவீங்களா? யாரெல்லாம் என்னை மிஸ் பண்ணுவீங்க என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். ஆனால் இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் பிரைம் டைமில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அதுபோல ஒரு சில சீரியல்கள் மட்டும் பல வருடங்களாக மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்து விடுகிறது. அதில் எதிர்நீச்சல் சீரியலுக்கும் தனி இடம் உண்டு. எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்கியிருந்தார். திருச்செல்வம் ஏற்கனவே இயக்கிய கோலங்கள், மெட்டிஒலி போன்ற சீரியல்கள் இப்ப வரைக்கும் மக்களால் பேசப்படுகிறது.
அந்த வரிசையில் எதிர்நீச்சல் சீரியலும் காலத்துக்கும் நிலைத்திருக்கும் என்று நினைத்த நேரத்தில் இந்த சீரியலில் வில்லனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று காலமானார். அவருடைய மரணத்திற்கு பிறகு சீரியல் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதனால் மக்கள் அதை விமர்சிக்க தொடங்கியிருந்தனர்.

அதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி பாராட்டியவர்கள் கூட அந்த சீரியலை விமர்சிக்க தொடங்கி இருந்தார்கள். ஆரம்பத்தில் சீரியல் பார்க்காத ஆண்கள் கூட எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதாக போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். அது போல அரசியல் பிரமுகர்கள் முதல் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வரை பலரும் எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து பார்ப்பதாக கூறியிருந்தனர்.
நடிகர் விஜயின் அம்மாவான சோபாவும் எங்கள் வீட்டில் எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து பார்ப்போம் என்று கூறியிருந்தார். இப்படி நல்ல பெயர் வாங்கி இருந்த நேரத்தில் விமர்சனங்கள் வந்த நிலையில் உடனே சீரியலுக்கு இயக்குனர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஆனால் அது அந்த சீரியலின் தீவிர ரசிகர்களை வருத்தமடைய செய்தது.

அதனாலயே ரசிகர்கள் எப்போது இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வரும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்த சீரியல் வரும் திங்கள்கிழமை முதல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் சீசனில் நடித்த நடிகர்கள் இரண்டாவது சீசனில் தொடர்வார்களா? அல்லது சிலர் மாற்றப்படுவார்களா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.
காரணம் ஜனனியாக நடித்த மதுமிதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கு பதிலாக விஜே பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் குணசேகரனுக்கு அடுத்தபடியாக விசாலாட்சி கேரக்டரில் நடித்து வந்த நடிகை சத்யபிரியா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில், நான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கவில்லை என்றால் நீங்கள் யாராவது வருத்தப்படுவீங்களா? என்னை யாரெல்லாம் மிஸ் பண்ணுறீங்க? என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் இவரால்தான் வில்லியாகவும் நடிக்க முடியும், பாசத்தில் பார்ப்பவர்களை உருக வைக்கவும் முடியும் என்று கமெண்ட் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலா? இந்த சீரியலில் இல்லாமல் இருப்பேனா? ஏட்..டி ஜனனி, ஈஸ்வரி, நந்தினி நான் மீண்டும் வந்துட்டேன் என்கிற மாதிரி அதில் பேசியிருக்கிறார்.

அதோடு நான் உங்க எல்லாரையும் பிராங்க் பண்ணுனேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் என்ன இவங்களும் பிராங்க் பண்ண தொடங்கிட்டாங்களே என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications