ஏன் இப்படி? .. எழுத்தாளரை அடுத்து தயாரிப்பாளரும் மரணம்.. சோகத்தில் சீரியல் ரசிகர்கள்
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடும் முதன்மையான தொடர்களில் ஒன்றுதான் சத்யா. இந்த சீரியலில் தான் தற்போது அந்த பெரும் சோகம் ஏற்பட்டு அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், சத்யா சீரியலின் தயாரிப்பாளர் ஆர்.கே மனோகர் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி சத்யா சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே சீரியலில் பணிபுரிந்த எழுத்தாளர் லோபர் சாமி நான்கைந்து மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த சீரியல் ரசிகர்கள் அடுத்த நிகழ்வாக இந்த சீரியலின் தயாரிப்பாளரும் மரணமடைந்துள்ளார்.

காத்திருக்கும் ரசிகர்கள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்தியா சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தற்போது பெரும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் இந்த சீரியலில் தொடர்ந்து ஏற்படும் சோகங்களை பற்றி சீரியல் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர். அதுவும் தொடரும் மரண செய்திகள் தான் அனைவரையும் மணமுடைய செய்துருக்கிறது. இந்த சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களத்தோடு கலகலப்பாக சென்று கொண்டிருந்தாலும் தொடர்ந்து இந்த சீரியல் இனி ஒளிபரப்பப்படுமா என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

உணர்ச்சிகரமான காதல் கதை
ஒரு ஆண் போல தைரியமாக வளர்ந்துவரும் சத்தியா தன்னுடைய தந்தையின் மெக்கானிக் செட்டை பார்த்து கொண்டு வருகிறார். தன்னுடைய அம்மா, பாட்டி மற்றும் பண ஆசை கொண்ட மூத்த சகோதரியான திவ்யாவுடன் வாழ்ந்துவருகிறார். இந்த நிலையில்தான் அடிக்கடி தனது கோமாளித்தனத்திற்கு பலியாகும் ஒரு பணக்காரன் பிரபு மீது மோதிக் கொள்கிறாள். ஆனால் அது வரைக்கும் ஒரு ஆண்போல சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குள் பெண்மை இருப்பதை புரிந்துகொண்டு பிரபுவை காதலிக்கிறார். ஆனால் பிரபு சத்யாவை ஒரு நல்ல தோழியாக தான் நினைக்கிறார். ஆனால் சத்யாவின் மனது புண்படாதபடி இவரும் காதலிப்பதாக நடிக்கிறார். ஆனால் ஏற்கனவே பிரபுவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அதுவும் சத்யாவின் சொந்த சகோதரியான திவ்யாவுடன் தான் என்பது பின்னர்தான் சத்யாவுக்கு தெரிய வருகிறது.

சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கும் டீம்
திவ்யாவுக்கும் பிரபுவுக்கும் திருமணம் முடிவாய் இருந்த நேரத்தில் திவ்யா வீட்டை விட்டு சென்று விடவே வீட்டில் உள்ளவர்களின் கட்டாயத்தின் பெயரில் பிரபுவும் சத்யாவம் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதற்கு பிறகு இவர்களுக்குள் ஏற்படும் முட்டல் மோதல்களும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசமும் இந்த கதைக்கு ஒரு சிறப்பம்சம் தான். அதுவும் அடாவடியான துடுக்குத்தனமான சத்தியா கேரக்டரை ரசிக்கும் ரசிகர்கள் அமுல்பேபியை ரசிக்காமல் இருக்க முடியாது. அந்த வகையில் இரண்டு பேருமே யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று தன்னுடைய நடிப்பால் கலக்கி வருகின்றனர். இவர்களின் நடிப்பதற்கு காரணம் இவர்களுடைய
சீரியல் டீம் என்று இவர்கள் அடிக்கடி கூறியிருக்கிறார்கள்.

பிரபலங்களின் இரங்கல் செய்தி
இதுவரைக்கும் இந்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தற்போது இவர்கள் இருவரும் அடுத்த கட்டமாக குழந்தைக்கு ரெடியாகி இருக்கின்றனர். இந்த அழகான ரொமான்ஸ், காதல் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது இந்த சீரியலின் மரண செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதனால்தன் தங்களுடைய மனக்குமுறல்களை இரங்கல் செய்தியில் தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலின் தயாரிப்பாளரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடரும் இரங்கல் செய்தி
பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் சத்தியா சீரியலுக்கு மட்டும் கஷ்டமா வருதே என்று கவலைகளை பகிர்ந்து இருக்கின்றனர். இந்த கோரானா காலகட்டத்தில் அதிகப்படியான இழப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் சின்னத்திரையாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி பிரபலங்கள் பலரையும் இந்த வருடம் இழந்துவிட்டோம். அவர்களுடைய இழப்பு தங்கள் வீட்டில் உள்ளவர்களின் இழப்பு போல இருக்கிறது என்று வேதனையோடும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications