Sathyan: ட்ரெண்டாகும் "ரோஜா ரோஜா” பாடலில் சத்யன் பக்கத்தில் நிற்கும் பெண் யார் தெரியுதா? சுவாரசியமான சம்பவம்
சென்னை: சினிமா உலகில் திறமை மட்டும் இருந்தால் போதாது; அதைக் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பும், மக்களின் கவனமும் வேண்டும். ஆனால், சில கலைஞர்களுக்குத் திறமை இருந்தும், வாய்ப்புகள் கிடைக்காதபோது, அவர்களின் வாழ்க்கை பாதை திசைமாறி விடுகிறது. அப்படிப்பட்ட வலியைச் சந்தித்த ஒருவர் தான் பாடகர் சத்யன் மகாலிங்கம். அவர் பாடிய ரோஜா ரோஜா பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி, அவரது வலியை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

சத்யனின் இசைப் பயணம்
1980ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சத்யன், சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவர். தனது 15 வயதிலேயே இசைக்குழுக்களில் பாடத் தொடங்கிய அவர், எம்.பி.ஏ. முடித்திருந்தாலும், இசை மீதான தீராத காதலால், அதையே தனது வாழ்க்கையாகத் தொடர்ந்தார். கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடி, ஒரு மேடைப் பாடகராகத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
2004ஆம் ஆண்டு, பரத்வாஜ் இசையில், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.படத்தில் இடம்பெற்ற 'கலக்கப் போவது யாரு?' பாடல் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். பின்னர், சரோஜா படத்தில் 'தோஸ் பட தோஸ்த்' மற்றும் கழுகு படத்தில் 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்' உட்பட 200க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
கஷ்டகாலத்தில் கை கொடுத்த மனைவி
தனது இசைப் பயணத்தில் சத்யனுக்குத் துணையாக இருந்தவர் அவருடைய மனைவி நித்யா ரெங்கராஜன். ஒரு பேட்டியில், சத்யன் தனது எம்.பி.ஏ. படிப்புக்குக் கூட தனது மனைவிதான் முழுமையாக ஆதரவளித்தார். நான் கச்சேரிக்கு போயிட்டு வந்த பிறகு அவர்தான் எனக்கு டீச்சர் ஆக பாடம் எடுப்பார் அதனால் தான் நான் வெற்றி பெற முடிந்தது என்று பெருமையோடு கூறியிருந்தார். குடும்பம், குழந்தைகள் எனப் பல பொறுப்புகள் இருந்தபோதும், சத்யனின் இசைப் பயணத்திற்கு நித்யா உறுதுணையாக இருந்துள்ளார்.
சமீபத்தில் வைரலான ரோஜா ரோஜா பாடலைப் பாடும்போது, அவருடன் சேர்ந்து பாடியது அவருடைய மனைவி நித்யா தான் என்று கூறப்படுகிறது. ஒரு கலைஞனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது.
சத்யனின் மனக்குமுறல்
200க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்த சத்யன், கொரோனாவுக்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் தவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, "இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் யாரும் பாட அழைக்காததால், நான் அமெரிக்காவில் ஒரு ஹோட்டலில் மெயின்டனன்ஸ் வேலைக்குச் சென்றேன். அங்கே நான்கு மாதம் வேலை பார்த்தேன்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சினிமா உலகில் திறமையிருந்தும், பல பாடகர்கள் வாய்ப்பு இல்லாமல் தவிப்பதைப் பற்றியும் அவர் பேசியுள்ளார். "நிறைய பேர் இந்த வேலை வேண்டாம் என்று விவசாயம் செய்யச் சென்றுவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் பாடகர்கள் வாய்ப்பு கேட்பதை விட, பாப்புலர் ஆவதைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராகச் சென்றபோது, அதில் போட்டியாளராகக் கலந்துகொண்டால் மக்கள் மத்தியில் பிரபலமாகலாம் என்று நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை" என்று அவர் வேதனையுடன் கூறினார்.
ஒரு கலைஞனின் வலி
சத்யனின் இந்த கதை, திறமை மட்டும் ஒருவரைப் பிரபலமாக்காது என்பதை உணர்த்துகிறது. அதே நேரம், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், கலையை விடுவதில்லை என்ற அவரது பிடிவாதம், பலருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. சத்யன் போன்ற திறமையான கலைஞர்கள், மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்து, தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் ஆசையாக உள்ளது. அவர்கள், மேடைகளிலும், படங்களிலும் மீண்டும் ஒலித்து, தங்கள் திறமையை நிலைநாட்ட வேண்டும். இது, திறமையின் பயணத்திற்கு ஒருபோதும் முற்றுப்புள்ளி இல்லை என்பதை நிரூபிக்கும்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications