Sembaruthi Serial: அட.... விசுவாசமே தல தீபாவளிக்கு அழைப்பு விடுத்துட்டார்!
சென்னை: தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் தொலைக்காட்சி சீரியல்களை தங்கள் கதைப்படி இது போன்ற பண்டிகை தினங்களை கொண்டாடுவது போல கதையை அமைப்பது வழக்கமாகி வருகிறது.
அதுவும் கதைப்படி தலை தீபாவளி மணமக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். வழக்கம், அது இது என்று சொல்லி அசத்தி வருகிறார்கள்.
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி பார்வதி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டாலும், அவர்களும் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

சுந்தரம் அகிலாண்டேஸ்வரி
சுந்தரம் முதலாளி அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு ரொம்ப ரொம்ப விசுவாசமானவர். ஒரு விஷயத்தை கூட அவர்களிடம் இருந்து மறைக்க முடியாது சுந்தரத்தால். அகிலாண்டேஸ்வரி அம்மாவின் மூத்த மகன் ஆதி, தனது மகள் பார்வதியை விரும்புகிறார் என்று மட்டுமே தெரிந்து இருந்த சுந்தரத்துக்கு இதை தாங்கிக்க முடியலை.

ஆதி தம்பியிடம்
பெரிய தம்பி ஆதியிடம், இதெல்லாம் வேண்டாம் தம்பி.. நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு சொல்லி அறிவுரை சொன்னாலும் கல்யாணம் முடிஞ்சு போன பிறகு என்னதான் செய்ய முடியும். ஒரு வழியாக கல்யாணம் நடந்ததும் தெரிந்து விட...நெருப்பில் நிற்பது போல துடித்து போகிறார் சுந்தரம்.

உண்மையை சொல்ல
அகிலாம்மாவிடம் உண்மையை சொல்லியே தீருவேன்னு சொல்லி புறப்பட்ட சுந்தரத்தை அதை இதை சொல்லி தடுத்து நிறுத்தி விடுகிறார்கள், ஆதியும், அவனின் அப்பாவும். ஆதியின் அப்பா சுந்தரத்திடம் போயி, மாப்பிளையை தல தீபாவளிக்கு அழைப்பு விட்டு சுந்தரம்னு கேட்க, என்னை மன்னிச்சுருங்க ஐயா. அகிலா அம்மா இந்த கல்யாணத்தை ஏத்துக்குவாங்களான்னு தெரியாம என்னால மாப்பிள்ளைன்னு தல தீபாவளுக்கு அழைப்பு விடுக்க முடியாதுன்னு சொல்றார்.

பூ கோயிலில்
கோயிலில் பூ போட்டுப் பார்க்க, அகிலா அம்மா இந்த கல்யாணத்தை ஏத்துக்குவாங்கன்னு செம்பருத்தி பூ வருது. உடனே தல தீபாவளி கொண்டாட மாப்பிள்ளைக்கு அழைப்பு விடுக்கிறார் சுந்தரம். மாப்பிள்ளை ஆதியும் வீட்டுக்கு வந்து பட்டு வேட்டி சட்டை அணிந்து பார்வதி, மச்சினன், மாமனாரோடு தீபாவளியை கொண்டாடி மகிழ்கிறான்.
செம்பருத்தி சீரியலின் தலை தீபாவளி இப்படி கொண்டாடி இருக்காங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications