Sembaruthi Serial: அப்போ...ஆதி என்கிட்டே பேசின மாதிரி... இப்போ என்னதாங்க பேசி இருப்பான்?
சென்னை: ஜீ தமிழ் டிவி ஆரம்பத்தில் எந்தவித ரேட்டிங் காஸ்ட் நிகழ்ச்சிகள் இல்லாமல்தான் ஆரம்பிக்கப்பட்டது. பெரிய திரை நடிகர் நடிகைகளின் நேர்காணல் அப்படி இப்படி என்று எதுவும் இல்லை.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவி சரியான நேரத்தில் ஆரம்பித்து ரேட்டிங்கில் அள்ளியது.அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியை ஆவலோடு பார்க்கத் துவங்கினார்கள்.
இதை வைத்தே அடுத்து தொலைக்காட்சி சீரியல்கள் என்று மக்களை ஈர்த்தது.இதன் உச்சமாக செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாக அந்த நேரத்தில் மக்களின் கவனம் முழுவதுமாக செம்பருத்தி சீரியல் பக்கம் திரும்பியது.

அடுத்தடுத்து சீரியல்கள்
செம்பருத்தி சீரியலை வைத்தே அடுத்தடுத்து சீரியல்கள் என்று களம் இறங்கி,இப்போது ஒரே ஒரு டப்பிங் சீரியல் தவிர மற்றது எல்லாம் ஸ்லாட் சீரியல்களாக மாறிஇருக்கிறது. ஜீ தமிழ் டிவி தொடர் நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்து உள்ளது.

குடும்ப அமைப்பு
செம்பருத்தி சீரியல் குடும்ப அமைப்பு எல்லாரும் விரும்பும் படி இருக்கிறது.அம்மாவை ரொம்பவும் மதிக்கும் ஆண் பிள்ளைகள். அப்பாவிடம் மட்டுமே ரொம்ப க்ளோஸாக இருக்கிறார்கள். என்னதான் வில்லி கேரக்டர்கள் இருந்தாலும், அவர்கள் அகிலாண்டேஸ்வரியின் பிள்ளைகளைப் பற்றி அகிலாண்டேஸ்வரியிடமே குறை கூறுவது எனும்போது பயப்படுவது என்று குடும்ப அமைப்பு மிக நன்றாக இருக்கிறது.

ஆதி என்னதான் பேசினான்?
நான் ஆபரேஷன் முடிஞ்சு மயக்கமா இருந்தப்போ ஆதி என்னவோ என்கிட்டே பேசினாங்கன்னு கணவனிடம் அகிலாண்டேஸ்வரி சொல்வது. கணவர் அப்படி எல்லாம் இல்லை அகிலா என்று சொல்லிவிட அதை அத்தோடு விட்டு விடுவது என்று அகிலாண்டேஸ்வரியின் நடவடிக்கையும் நன்றாகவே சித்தரிக்கப்பட்டு உள்ளது.

உண்மை என்றவுடன்
ஆதி தன்னிடம் பேசியது உண்மை என்று தெரிந்த நிலையில் மட்டுமே பிள்ளையிடம் ஆதி நான் மயக்கத்தில் இருந்தப்போ என்னவோ நீ என்னிடம் பேசி இருக்கே. அது என்ன என்று கேட்பது..அவனும் மழுப்பாமல் ஆமாம்மா.. பேசினேன். என்ன பேசினேன்னு என் பொறந்த நாளன்னிக்கு சொல்றேன்மான்னு சொல்ல, இப்பவே சொல்லு என்று அதட்டாமல் சரி என்று அகிலாண்டேஸ்வரி போயிடறாங்க.
ஆனாலும், அப்படி என்னதான் ஆதி பேசி இருப்பான்னு அவங்க மனசில் ஓடுவதை கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வது என்று ரொம்ப டீசண்ட் குடும்பமாக செம்பருத்தி சீரியல் குடும்ப அமைப்பு இருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications