செம்பருத்தி சீரியல் வீட்டிற்குள் திடீர் மரணம்.. கதறி அழுத பரதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடருக்கு ரசிகர்கள் ஏராளம்.

ஷபானா, பிரியா ராமன், கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த சீரியலில் தற்போது டிஆர்பி ரேட் முதலிடத்தில் உள்ளது. இந்தநிலையில் இந்த சீரியலில் பணியாற்றி வந்த ஒருவர் திடீரென்று இறந்துவிட்டார்.

இதைக் கேள்விப்பட்ட நடிகை கதறி அழுது இணையதளத்தில் வீடியோ போட்டு இருக்கிறார் இது வைரலாக பரவி வருகிறது.

 மித்ரா என்கிற பரதா நாயுடு

மித்ரா என்கிற பரதா நாயுடு

செம்பருத்தி சீரியலில் மித்ரா கேரக்டரில் நடிகை பரத நாயுடு நடித்துள்ளார். இவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பே பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தேன் மிட்டாய் என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு மிர்ச்சி சிவா உடன் அட்ரா மச்சா விசிலு படத்திலும் 2017 இல் வெளிவந்த நிரஞ்சனா என்னும் படத்தில் கதாநாயகியாகவும் மேலும் ஹேப்பி மேரிட் லைப் இரண்டு கேடி 3 கோடி மஞ்சளாறு என பல படங்களில் நடித்துள்ளார்.

 வில்லி கேரக்டர்

வில்லி கேரக்டர்

அந்தப் படங்கள் எதுவும் எதிர்பாத்த வெற்றி அடையாததால் சின்னத்திரையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 9 லில் போட்டியாளராக களமிறங்கினார் .அதைத் தொடர்ந்து தற்போது தேவதையை கண்டேன் என்னும் சீரியலில் ஓவியா கேரக்டரிலும் செம்பருத்தி சீரியலில் மித்ரா என்னும் கேரக்டரிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

 நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

செம்பருத்தி சீரியலில் நடிக்கும்போது இந்த சீரியலில் பணியாற்றிய பரத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செம்பருத்தி சீரியலில் இவர் வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்த சீரியலுக்கு இருக்கும் வரவேற்பு இவருக்கும் இருக்கிறது. தற்போது எப்போது இவர் இந்த சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இணையதளத்தில் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 திடீர் மரணம்

திடீர் மரணம்

அதுவும் இந்த சீரியலை பற்றி இவர் கூறியிருப்பதும் பலர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த வீடியோவில் அவர் செம்பருத்தி சீரியலில் கேமராமேனாக பணியாற்றி வந்த அன்பு அவர் என்பவர் திடீரென மரணம் அடைந்திருப்பது மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்த சீரியலில் தனக்கு பக்கபலமாக இருந்தது அவரும் விஐயன் என்பவரும் தான் என்றும் கூறியிருக்கிறார்.

 அரசியல் ஆதிக்கம்

அரசியல் ஆதிக்கம்

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் முழுக்க முழுக்க "அரசியல்" அதிகமாக இருப்பதாகவும் தான் அந்த வீட்டில் தனியாகவே வேதனையோடு இருந்ததாகவும் கூறியிருக்கிறார். தான் ஒதுக்கப்பட்ட நேரத்தில் தனக்கு ஆறுதலாக இவர் மட்டும்தான் இருந்தார் என்றும் கூறி கதறி அழுதிருக்கிறார். அவருடைய இழப்பு பற்றி தனக்கு இன்று தான் தெரியும் என்றும் அதைப் பற்றி கேட்டதும் தான் ரொம்பவும் நொறுங்கிப் போய் விட்டதாகவும் கூறியிருக்கிறார்

 ஆச்சரியத்தில் ரசிகர்கள்

ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இந்த சீரியலை பற்றி இவர் போட்டிருக்கும் வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் ஆறுதல் கூறினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலை பற்றி இவர் இப்படிக் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தற்போது விவாதப் பொருளாகாவும் மாறியிருக்கிறது. இப்படி பொது வெளியில் புகார் போல அவர் கூறியிருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+