Sembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா குடுடின்னு மித்ராவை அதட்டிக் கேட்கிறாள் பார்வதி.

ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி ஹைதராபாத் போன போது பார்வதிக்கு ஒரு புடவை எடுத்துட்டு வந்து தர்றான்.

அந்த புடவையை ஆதி ரூமில் வச்சுட்டு அப்புறமா பிறந்த வீட்டுக்குப் போகும்போது எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டு போறா.

பார்வதி ஜாதகம்

பார்வதி ஜாதகம்

பார்வதி ஜாதகம்தான் ஆதி கடவுள் அருள் பெற்ற பரம்பரை அகிலாண்டேச்வரி வீட்டுக்கு மூத்த மருமகளா வரப் போகிறவள் யோக ஜாதகம் என்பதைத் தெரிந்துகொண்ட மித்ரா பார்வதி ஜாதகத்தை திருடி அகிலாண்டேஸ்வரி அம்மாவிடம் தன் ஜாதகம்னு குடுத்துடறா.

அகிலா மித்ரா

அகிலா மித்ரா

அப்போது அகிலா அம்மா மித்ராதான் தன்னோட மூத்த மருமகள்னு முடிவு பண்ணி ,அவளை வீட்டில் தங்க வைக்கிறாங்க. ஆனால்.அவள் ஆதி கடவுள் அருள் பெற்ற இந்த அகிலாண்டேஸ்வரி குடும்பத்தை அழிக்க வந்தவள் என்று ஆதி, பார்வதி, ஆதியின் அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சும் இதை சொல்ல முடியாமல் தவிக்கறாங்க.

பார்வதி கையில்தான்

பார்வதி கையில்தான்

ஆதிக்கும், பார்வதிக்கும் கல்யாணம் ஆகிவிட்ட விஷயத்தை சொல்வதற்கு முன் சின்ன சின்ன விஷயங்களை சொல்லி அடுத்து கடைசியாக கல்யாணமான விஷயத்தை அதி தனது பிறந்த நாள் அன்று அம்மாவிடம் சொல்ல திட்டமிடுகிறான். முதலில் குருஜியை வச்சு குளத்தில் இருந்த ஆத்ம லிங்கம் பார்வதி கையில்தான் கிடைச்சுது..மித்ரா கையில் கிடைக்கலேன்னு சொல்ல வைக்கறாங்க.

அகிலாண்டேஸ்வரி மனசு

அகிலாண்டேஸ்வரி மனசு

இருந்தாலும் அகிலாண்டேஸ்வரி மனசு இன்னும் மித்ரா பக்கம்தான் இருக்குது.இப்படிப்பட்ட நிலையில்தான் ஆஅதியைத் தேடி மித்ரா அவன் ரூமுக்கு போறா. ஆதியைக் காணோம்னு அவன் ரூமில் இருந்த புடவையை எடுத்துட்டு வெளியில் வர்றா. இதை பார்த்த ஆதி.. யாரும் இல்லாத நேரத்தில் பெரியய்யா ரூமில் இருந்து புடவையைத் திருட்டிக்கிட்டு போறியே உனக்கு வெட்கமா இல்லைன்னு கேட்கிறாள்.

எனக்குத்தான் ஆதி

எனக்குத்தான் ஆதி

என் கழுத்தில்தாலி கட்டி கல்யாணம் செய்துக்கப் போற ஆதி எனக்கு எடுத்துக் குடுத்த புடவையை நான் எடுத்துட்டுபோவத்தில் என்ன தப்புன்னு கேட்கிறாள் மித்ரா. உனக்கு பெரியய்யா புடவை வாங்கிட்டு வருவாரா..குடுடி புடவையைன்னு கேட்கும்போதே ஆதி அங்கு வந்து மித்ரா கையில் இருந்த புடவையை பார்வதி கையில் வாங்கிக் கொடுத்து..

தேவதையாய் பார்வதி

தேவதையாய் பார்வதி

அப்பவே சொன்னேன்..உடனே கட்டிடுன்னு..இப்போ போயி கட்டிக்கிட்டு வா பார்வதின்னு சொல்றான் பார்வதியும், மித்ராவிடம் கண்ணைக் காண்பித்து விட்டுப் போகிறாள். வரும்போது கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருன்னு கருப்பு புடவையை கட்டிக்கொண்டு தேவதை போல நடந்து வர ஆதி அவளை பார்த்து சொக்கி நிற்கிறான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+