Kuberaa Review: குபேரா படத்தின் மைனஸ்கள் என்ன? "ஒட்டாத" நாகார்ஜுனா, தனுஷ்! பிரபலம் விமர்சனம்
சென்னை: நடிகர் தனுஷின் குபேரா படம் வெளியாகியுள்ள நிலையில் அந்த படத்தில் என்னென்ன மைனஸ் இருக்கிறது என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதை பார்ப்போம்.
மைனஸை பார்க்கும் முன்னர், இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் நீரஜ் மித்ரா (ஜிம் சர்ப்). இவர் அரசாங்கத்தையே கைக்குள் போட்டுக் கொண்டு நினைத்ததை சாதிக்கிறார். தமிழக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கும் தகவல் அரசாங்கத்துக்கு முன்பே நீரஜுக்கு கிடைக்கிறது.

இதை தன்னிடம் ஒப்படைத்தால் என்னென்ன கிடைக்கும் என்பதை கூறும் நீரஜ், அந்த மத்திய அமைச்சரிடம் டீல் பேசுகிறார். இந்த வேலையை செய்து முடிக்க சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை (நாகார்ஜுனா) நீரஜ் நாடுகிறார். முதலில் நீரஜ் மறுக்கிறார், ஆனால் பின்னர் ஒப்புக் கொள்கிறார்.
கருப்பு பணம்
கருப்பு பணத்தை பினாமி சொத்து மூலம் வெள்ளையாக மாற்ற சில பிச்சைக்காரர்களை பயன்படுத்த தீபக், நீரஜுக்கு ஐடியா கொடுக்கிறார். இதற்காக 4 பிச்சைக்காரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் திருப்பதியில் இருந்து அழைத்து வரப்படும் தேவாவும் (தனுஷ்) ஒருவர்.
கொலை
பிச்சைக்காரர்களை பணக்காரர்கள் போல மாற்றி பயிற்சி கொடுத்து பணத்தை கைமாற்றுகிறார்கள். இதில் நீரஜ்ஜின் உத்தரவுபடி பணம் கைமாறியதும் ஒவ்வொரு பிச்சைக்காரராக கொல்லப்படுகிறார். இதை தெரிந்து கொள்ளும் தனுஷ், நீரஜின் ஆட்களிடம் இருந்து தப்பிக்கிறார்.
குறுக்கே வந்த ராஷ்மிகா
அப்போது காதலனால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயலும் சமீராவை (ராஷ்மிகா) சந்தித்து அவரை காப்பாற்றுகிறார். எனினும் தனுஷால், சமீராவுக்கும் பிரச்சினை வருகிறது. நீரஜிடம் இருந்து தேவா தப்பினாரா என்பதுதான் குபேரா படத்தின் கதை!
3 மணி நேரம்
இந்த படம் முதலில் மூன்றரை மணி நேரம் எடுக்கப்பட்டதாம். பின்னர் அதை சுருக்கி 3 மணி நேரமாக்கினார்களாம். இந்த படத்தின் மைனஸ் குறித்து செய்யாறு பாலு கூறியிருப்பதாவது: படத்தின் நீண்ட கால நேரமே ரசிகர்களுக்கு சோர்வை கொடுத்து விடுகிறது.
முதல் பாதி கதை நன்றாக இருக்கிறது. அடுத்த பாதியில் நாலைந்து சீன்களை திருப்புமுனையாக வைத்து டக்குனு கதையை முடித்திருக்கணும். நடிப்பு அரக்கன் தனுஷ் நடிப்பு கேட்கவே வேண்டாம். அருமையாக இருக்கிறது.
ஒட்டாத சீன்
பிச்சைக்காரன், கோடீஸ்வரன், சிபிஐ அதிகாரி என மாத்தி மாத்தி கதை போகுது. ஆனால் எதுவுமே ஒட்டலை. இந்த சீனை ஏன் வைத்தார்கள் என கேட்கும் அளவுக்கு இருக்கிறது. படத்தில் நிறைய சீன் அது பாட்டுக்கு ஓடுது. ஐயோ நிறுத்துங்க என ஆடியன்ஸை சொல்ல வைக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications