தூறல் நின்னு போச்சுல சுலக்ஷனா கிட்ட பேசும்போது, டக்னு அழுத செந்தாமரை மகள்.. நடிகைகளின் பாசமான அப்பா
சென்னை: பழம்பெரும் நடிகர் செந்தாமரையின் குணம், திறமைகள் குறித்து அவரது மகள் பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார்.. தங்கப்பதக்கம் படத்தில், தன்னுடைய அப்பா நடிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதையும் கூறியிருக்கிறார்.. தன்னுடைய அப்பா பற்றிபேசும்போது, கண்கலங்கி அழுதவாறே நிறைய விஷயங்களை பேட்டியில் சொல்லி உள்ளார் ராஜலட்சுமி.
IndiaGlitz Tamil யூடியூப் சேனலுக்கு, செந்தாமரையின் மகள் ராஜலட்சுமி தந்துள்ள பேட்டியில், "சண்முகா தியேட்டர்ஸ் என்ற நாடக குழுவை என் அப்பா வைத்திருந்தார். இந்த நாடக குழுவில் டைரக்டர் மகேந்திரன் அங்கிள் ஸ்கிரிப்ட் எழுதுவார்.. இளையராஜா சார், சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரன் இவர்கள் எல்லாம் அப்போது, அந்த நாடகக்குழுவில் மியூசிக் போட்டிருக்கிறார்கள்.

100 நாடகங்கள்: 100 நாடகங்களை அரங்கேற்றம் செய்திருக்கிறார் என் அப்பா.. 100வது நாள் நாடக விழாவுக்கு, சிவாஜி கணேசன் வந்திருந்தார்.. அந்த நாடகத்தில் என் அப்பா சவுத்ரி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.. இதற்கு எஸ்ஏ கண்ணன்தான் டைரக்டர்.. அதேபோல, சிவாஜி நாடக மன்றத்திலும் எஸ்ஏ கண்ணன் தான் டைரக்டராக இருப்பார்.
அந்த 100வது நாள் டிராமாவை, சிவாஜி கணேசன், 10 முறை நேரில் வந்து பார்த்துள்ளார்.. பிறகு இந்த டிராமாவை விலைக்கு வாங்கி கொள்வதாக சொல்லவும், என் அப்பாவும் அந்த நாடகத்தை சிவாஜி சாருக்கு தந்துவிட்டார்.
மனஸ்தாபம்: எஸ்ஏ கண்ணன் இயக்குனராகவும், மகேந்திரன் அங்கிள் கதை வசனத்திலும் "தங்கப்பதக்கம்" என்ற பெயரில் படம் தயாரானது,. ஆனால், சிவாஜி சாருக்கும், என் அப்பாவுக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.. எஸ்ஏ கண்ணன்தான் இருவரையும் சமாதானப்படுத்தியிருக்கிறார். எனினும் தகராறு நடந்ததால், என் அப்பா அதில், நடிக்கவில்லை.. அவருக்கு பதிலாகத்தான் விகே ராமசாமி அந்த கேரக்டரை செய்திருந்தார்.
உலகத்தில் 2 பேருக்காக மட்டுமே அழுவேன், ஒன்று என்னுடைய அப்பா, இன்னொன்று நான் வளர்க்கும் கிளி.. என் அப்பா பற்றி பேசினாலே நான் அழுதுடுவேன்.. இறந்தபிறகு அவர் நடித்த எந்த படத்தையும் நான் பார்க்கவில்லை.
தூறல் நின்னு போச்சு: 1982-ல் தூறல் நின்னு போச்சு படம், சூப்பர் ஹிட்டானது.. அந்த படத்தில் என் வீட்டில் எப்படி இருப்பாரோ, அது போலவே இருப்பார்.. அதில் மகளாக சுலக்ஷனா நடித்திருப்பார்.. என்கிட்ட பேசுவதுபோலவே சுலக்ஷனாவிடம் பேசுவது இருந்தது.. பெரும்பாலான ஹீரோயின்கள், "அப்பா" என்றுதான் அவரை கூப்பிடுவார்கள். அந்த அளவுக்கு அனைவரிடமும் அன்புடன் பழகுவார்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மேனரிசம் வைத்திருப்பார்.. சின்னபூவே மெல்ல பேசு, படிக்காவன், மூன்று முடிச்சு இப்படி நிறைய படங்களில் அந்த மேனரிசத்தை பார்க்கலாம்.. எஸ்எஸ்எல்சி மட்டுமே படித்திருக்கிறார் என்றாலும், நிறைய இங்கிலீஷ் படம் பார்ப்பார்.. எங்களிடம் டிஸ்கஸ் செய்வார்.. நிறைய இங்கிலீஷ் படம் பார்ப்பார்..
நண்பர்கள்: நடிகர்கள் ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தராஜன், வி.கோபாலகிருஷ்ணன் இவர்கள் 3 பேருமே என் அப்பாவுக்கு சினிமா துறையில் நெருங்கிய நண்பர்கள்.. "மெட்டி" படத்தில் நடிக்கும்போது சரத்பாபுவும் அப்பாவிடம் நெருக்கமாகிவிட்டார். மரியாதை தரக்கூடியவர்களே, அவரிடம் அதிக நட்புடன் இருந்தார்கள்" என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லி உள்ளார்.












Click it and Unblock the Notifications