கணவருக்காக ராஜலட்சுமி செய்த செயல்.. கெட்டப் மாறினாலும் காதல் மாறலையே! !
சென்னை: காதல் கணவருக்காக ராஜலெட்சுமி செய்த செயலைப் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Recommended Video
என்னதான் இவர்கள் விதவிதமாக கெட்டப் மாற்றி கொண்டிருந்தாலும் இவர்கள் அன்பு மட்டும் மாறவில்லை என்பது தான் பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகம்
நாட்டுப்புற கலைஞர்களாக ஒரு சில இடங்களில் மட்டுமே பரிச்சயமாகி இருந்துவந்த ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக தொடங்கியிருக்கின்றனர். இவர்கள் இருவருமே திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் முன்னணி பாடகர்கள் ஆக மாறி இருக்கின்றனர். ஆரம்பத்தில் இவர்கள் திருவிழாக் கூட்டங்களிலும் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி கொண்டிருந்தவர்கள் இன்று உலகம் முழுவதும் இவர்களுடைய பாடல் முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றது.

அதிகரிக்கும் நெகட்டிவ் கமெண்ட்டுகள்
ஆரம்பத்தில் கடை கோடியில் இருந்தவர்கள் முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்கியதும் ஏராளமான கருத்துக்கள் வருவது போலத்தான் இவர்களுக்கும் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்து கொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இவர்கள் ஆக்டிவாக இருந்து வருவதால் பல்வேறு கருத்துகளையும் இவர்கள் சந்தித்து தான் வருகின்றனர். ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு கொடுத்தாலும், ஒரு சில நெட்டிசன்கள் இவர்கள் செய்யும் செயல்களுக்கு அதிகமாக கலாய்த்து வருகின்றனர். எப்போதுமே தங்களுடைய ரசிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் தங்களுடைய முன்னேற்றத்தில் கவனமாக இருந்து வருகின்றனர்.

பிஸியான வாழ்க்கை
தற்போது தேர்தல் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் ஆன ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பாடல்கள் பாடுவதில் பிஸியாக இருக்கும் இவர்கள், தற்போது போட்டோசூட்டிலும் அதிகமாக கலக்கி வருகிறார்கள். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்தாலும் இவர்கள் என்றும் காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும் சிலர் பொறாமையில் இவர்களை கலாய்த்து வரவும் தவறவில்லை.

வேற லெவல் கேப்ஷன்
ஏற்கனவே புஷ்பா திரைப்படத்தில் ராஜலட்சுமி பாடிய பாடல் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் நிலையில் தற்போது அந்த திரைப்படத்தில் ஒளிபரப்பான ஸ்ரீ வள்ளி என்னும் பாடலுக்கு புஷ்பா கெட்டப்பில் செந்தில் கணேஷ் டான்ஸ் ஆடியிருக்கிறார். தன்னுடைய கணவர் வெயிலில் கருத்துவிடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ?? அல்லது மேக்கப் குறைந்து விடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ??ராஜலட்சுமி ஓடி ஓடி சென்று அவருக்கு குடை பிடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கானவர்களுக்காக நாம் செய்யும் சிறு சிறு மெனக்கெடல் கூட காதலின் அழகு தான் என்று இவர் கேப்ஷன் வெளியிட்டிருக்கிறார். ராஜலட்சுமியின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் லைக்குகள் அளித்துக் கொண்டே வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இருவரும் கலக்கலான மேக்கப் போடும் புது கெட்டப் போட்டு வலம் வருவது இவர்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications