சூப்பர் சிங்கரில் சொன்னது 50 லட்சம் வீடு! ஆனால் கிடைத்தது இதுதான்! செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்ததற்காக நாட்டுப்புறப் பாடகர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதிக்கு கிடைத்த வீடு பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்கள். அதில் எங்களுக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் எங்களுக்கு 35 லட்சம் மதிப்புள்ள வீடு தான் கிடைத்தது, அதற்கான காரணம் இது தான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கலந்து கொள்ளும் சாதாரண மக்களும் கூட பிரபலமாகி விடுகிறார்கள். தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் நாட்டுப்புற நடன கலைஞரான தாமரை செல்வி கலந்து கொண்டு இப்போது சீரியலில் கலக்கி கொண்டு இருக்கிறார்.

அதுபோல விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் சாதாரண அடித்தட்டு மக்கள் பலர் கலந்து கொண்டு இப்போது பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக ஒவ்வொரு வருடமும் மாறி மாறி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் டைட்டில் ஜெயிப்பவர்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட தொகையில் வீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டை உடனே போட்டியாளர்களால் பெற முடியவில்லை என்று சில செய்திகளும் வலம் வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் 9வது சீசனில் டைட்டில் வெற்றி பெற்ற அருணாவும் பேசி இருந்தார்.
அதில் அவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்ட நிலையில் அதற்காக அரசுக்கு 15 லட்சம் வரி கட்ட வேண்டிய நிலை இருப்பதால் தனக்கு அந்த தொகையை உடனடியாக கட்ட முடியாததால் என்னால் இன்னும் அந்த வீட்டை வாங்க முடியவில்லை, நாங்கள் தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் தருகிறோம் என்று சொல்லி இருக்கிறோம்.

அந்த பணத்தை முழுமையாக கட்டி முடித்ததும் வீடு எங்கள் பெயருக்கு மாறிவிடும் என்று அருணா சொல்லி இருந்தார். அதுபோல சூப்பர் சிங்கர் சீனியர் எட்டாவது சீசனில் டைட்டில் வின்னராக ஜெயித்த நாட்டுப்புற பாடகர்களான ராஜலட்சுமி செந்தில்- கணேஷ் தம்பதி தங்களுக்கு கிடைத்த வீடு என்ன ஆச்சு என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்கள்.
அதில் நாங்கள் 8வது சீசனில் டைட்டில் வெற்றி பெற்ற போது 50 லட்சம் மதிப்புள்ள வீடு எங்களுக்காக கிடைப்பதாக சொன்னார்கள். ஆனால் அதற்கு 18% வரி கட்ட வேண்டும். அப்படி பார்க்கையில் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் அளவிற்கு வரி கட்ட வேண்டும். ஆனால் எங்களிடம் இரண்டு ஆப்ஷன் சொன்னார்கள். ஒன்று நீங்கள் 15 லட்சம் கட்டி 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கிக் கொள்வது. இல்லை என்றால் அந்த 15 லட்சம் குறைத்து 35 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

எங்களுக்கு கிராமத்தில் வீடு இருக்கிறது அதுபோல சென்னையில் எங்களுக்கு சிட்டியில் பெரியதாக வேலை இருக்காது. அதனால் உக்கரம் பகுதியில் அவர்கள் எங்களுக்கு வீடு தருகிறோம் என்றதும் நாங்கள் எங்களுக்கு வரி பணம் 15 லட்சத்தை குறைத்து 35 லட்சம் மதிப்புள்ள வீடு போதும் என்று சொல்லிவிட்டோம். அதனால் எங்களுக்கு சூப்பர் சிங்கரில் இருந்து 35 லட்சம் மதிப்புள்ள வீட்டை பத்திரப்பதிவு செய்து எங்களிடம் கொடுத்து விட்டார்கள் என்று செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதி விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications