Senthoora Poove Serial: செந்தூரப் பூவில் வாசனை வருமா?
சென்னை: விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வயது வித்தியாசம் இல்லாத காதல் கதையை சொல்லப் போகிறார்களாம். ஆணுக்கு வயது அதிகம்.. பெண்ணுக்கு வயது கம்மி..
இருவரும் சேர்ந்து காதல் வாழ்க்கை வாழப் போகிறார்கள். இது எப்படி சரி வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்... ப்ரோமோ ரொம்ப விஷயங்களை உணர்த்துவதாக இல்லை.
நாம் இருவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கையை பார்த்து ஊரே பொறாமைப் படப் போகுதுன்னு நாயகி சொல்வது போல ப்ரோமோ இருக்கிறது.

ஜீ தமிழ் டிவி விஜய் டிவி
நீதானே என் பொன்வசந்தம் என்று ஜீ தமிழ் டிவியில் ஒரு சீரியல் ஒளிபரப்பாகி வருது. அதன் கதையும் காதலுக்கு வயதில்லை என்பதை உணர்த்தும் விதமாகத்தான் ஒளிபரப்பாகி வருது. அதே பாணியில் விஜய் டிவியும் காதலிக்க வயதில்லை என்று செந்தூரப்பூவே சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது.

ப்ரோமோ ஒரு மாதமாக
இதன் ப்ரோமோ கடந்த மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருது. இதுவரை இரண்டு ப்ரோமோக்களை வெளியிட்டு இருக்கும் விஜய் டிவி, சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நேரத்தையும், தேதியையும் அறிவிக்கவில்லை. நடிகர் ரஞ்சித் வயது அதிகமான தோற்றத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக கலர்ஸ் தமிழ் டிவியின் தறி சீரியல் நாயகி நடிக்கிறார்.

செந்தூரப்பூ வேணும்
எனக்கு செந்தூரப்பூ வேணுன்னு பிறந்தநாள் பரிசாக நாயகி கேட்க, நாயகனும் செந்தூரப்பூவைத் தேடி அலைகிறான். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் அது கற்பனை மலர் தம்பின்னு சொல்றார். இவனும் நிறைய பூக்களை தொட்டிகளோடு வாங்கி வந்து குவித்து விடுகிறான். அதை பார்த்து நாயகி ஆச்சரியப் படுகிறாள்.

வயசுதான் இடிக்குது
நாம ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு இல்லைன்னு நாயகி கேட்க, ஜோடிப் பொருத்தம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால், வயசுதான் என்று இழுக்கிறான் நாயகன். காதலிக்க மனசு ஒத்து போனா போதும்...வயசு எல்லாம் ஒரு பிரச்சனை இல்லைங்க.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழப் போறோம். இந்த ஊரே பார்த்து பொறாமைப் படப்போகுதுன்னு நாயகி சொல்றா. இது எந்த அளவுக்கு உண்மை.. இதில் சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றாங்க..ஒன்னும் புரியலை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications