எங்களுக்கு குழந்தை இல்லை.. தம்பி பையன் தான்! என் வேதனை எனக்குத்தான்! சோகங்களை பகிர்ந்த நடிகர் தேவ்
சென்னை: சின்னத்திரை நடிகர் ஆன தேவ் ஆனந்த் தன்னுடைய குடும்பத்தை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
25 வருடங்களாக சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் தேவ் ஆனந்த் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் கூறி இருக்கிறார்.
நடிகர் தேவ் ஆனந்திற்கு குழந்தைகள் கிடையாதாம். அவருடைய தம்பி மகனை தான் தன்னுடைய மகனாக வளர்த்து வருகிறாராம்.

சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் தேவ் ஆனந்த் சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய இத்தனை வருட திரை வாழ்க்கை குறித்தும் தன்னுடைய குடும்பத்தை குறித்தும் கூறி இருக்கிறார். அதில் தனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் நடந்தது என்றும் தங்களுக்கு இப்ப வரைக்கும் குழந்தை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இவருடைய தம்பியின் மகனை தான் இவர் வளர்த்து வருகிறாராம். இவருடைய தம்பியின் மகன் இவரை அப்பா என்று தான் அழைப்பாராம். எப்போதும் இவரோடு அதிகமாக பாசமாக இருப்பாராம். அதோடு இந்த நடிப்பு வாழ்க்கையில் பல வேதனைகளை தான் அனுபவித்து இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார் ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு அதிகமாக கோபம் வரும் அதனாலே என்னுடைய வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இப்போது நடப்பது எல்லாம் பார்க்கும் போது இவ்வளவு தானா என்று தோன்றுகிறது. ஆனால் முன்னாடி அப்படி எனக்கு தோணாது இப்ப வர்ற நடிகர்கள் பலரும் யாரையும் மதிக்கிறது இல்லை. அது வேதனையாக இருக்கிறது. நான் 25 வருஷமா நடிச்சுகிட்டு இருக்கிறேன். பலர் இப்ப வந்துகிட்டு நீங்க எல்லாம் ஒரு ஆளா என்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள். அது பார்க்கும்போது கடுப்பாக இருக்கிறது. குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்திற்கு வர மாட்டேங்குகிறார்கள் என்று பல குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நான் நடித்து முடித்த ரோஜா சீரியலில் கூட இரண்டு பேர் என்னிடம் அப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அப்படி ஏதாவது நடந்தால் இப்ப அந்த இடத்தை விட்டு நான் எழுந்து போய் விடுவேன். அதுவும் சித்தி சீரியல் என்னால் மறக்கவே முடியாது. அந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில மாதங்களாக எனக்கு வாய்ப்பு இல்லாமல் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தாடி எல்லாம் வளர்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டேன். அப்போதுதான் சித்தி சீரியல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.

சீரியலில் தனக்கு ஒரு டாக்டர் ரோல் கிடைத்ததாகவும் ஆனால் அது ஒரு சோம்பேறி டாக்டர் என்றும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர் போன்று இருந்ததாம். எனக்கு ஏற்கனவே சும்மாவே சாப்பிட பிடிக்கும் என்பதால் இந்த கேரக்டரை சொல்லி நான் நன்றாகவே சாப்பிட்டு கொண்டிருந்தேன். வீட்டில் கிளினிக் வைத்து தந்தால்தான் நான் வேலை பார்ப்பேன் என்று சோம்பேறியாக நடித்த அந்த கதை பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அதை மறக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications