அப்போ மகாலட்சுமி.. அடுத்து திவ்யா ஸ்ரீதர்.. இப்போ கொலை மிரட்டல் பிரச்சனையில் சிக்கிய சீரியல் நடிகர்
சென்னை: சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் மீது பிரபல பாடகர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
தான் தன்னுடைய அம்மாவோடு தனியாக வசித்து வரும் நிலையில் நடிகர் ஈஸ்வர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாடகர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே சீரியல் நடிகைகளின் பிரச்சனைகளை அடிக்கடி சிக்கிக் கொண்டிருந்த ஈஸ்வர் புதியதாக கொலை மிரட்டல் பிரச்சனையில் சிக்கி இருக்கும் நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல பாடகர் கிருஷ்ணா. இவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் நேற்று முன்தினம் நான் இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்றிருந்தேன். அங்கு சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் ரகுநாதன் சக நடிகர்களோடு இருந்தார். என்னைப் பார்த்ததும் என்னிடம் வந்து உடனடியாக அங்கிருந்து கிளம்பி விடுமாறு மிரட்டினார்.
நான் அதற்கு காரணம் கேட்டால் உன்னை கொல்வதற்கு 10 பேரை நான் தயார் செய்து வைத்துள்ளேன். உன் நாட்களை எண்ணிக்கொள் என்று என்னை மிரட்டினார். நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். எனக்கும் அவருக்கும் எந்தவித முன் விரோதமும இல்லை. அவருடன் பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிர் பயம் கொடுக்கும் அளவிற்கு என்னை மிரட்டியதற்கான காரணமும் தெரியவில்லை.

அதனால் தயவு செய்து அவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் நான் வயசான என்னுடைய அம்மாவோடு வசித்து வருவதால் ஈஸ்வரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ஆரம்பகாலகட்டத்தில் இருந்து சின்னத்திரையில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நபராகத்தான ஈஸ்வர் இருந்து வருகிறார். அவருடைய மனைவிக்கும் ஈஸ்வருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்கள் பிறகு பிரச்சனைகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்திலும் போலீஸ் கம்ப்ளைன்ட் முதலாக அதிகமாக ஈஸ்வர் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது.

சீரியல் நடிகையான மகாலட்சுமி யோடு ஜோடியாக ஈஸ்வர் நடிக்கும் போது அவருக்கும் ஈஸ்வருக்கும் காதல் இருப்பதாக அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. ஈஸ்வர் மனைவி கூட அது பற்றி தான் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் அர்ணவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் பிரச்சினையிலும் ஈஸ்வர் பெயர் அதிகமாக ஈடுபட்டு அடிபட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் இவர் புது பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையிலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் இதற்கு சம்பந்தமே இல்லாத சில வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications