அதிர்ச்சி செய்தி.. சீரியல் நடிகர் திடீர் மரணம்.. அடுத்தடுத்து துயரங்கள்.. வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: சமீப காலமாகவே சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பல பிரபலங்கள் திடீரென மரணம் அடைந்து விட்டார்கள் என்ற செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது. அந்த வரிசையில் இன்று சீரியல் நடிகர் பிரபாகரன் மறைவு செய்தி பலரையும் வருத்தம் அடைய செய்திருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா இதய நோய் காரணமாக திடீரென காலமானார். அவருக்கு ஏற்கனவே இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சை எடுக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்து ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தபோது அவர் திடீரென காலம் ஆகி இருந்தார்.

வருத்தமான செய்தி
அதுபோல நடிகர் ஹுசைனி தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொண்டதும் அது பற்றி சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டிருந்தார் அதுவரைக்கும் ஆரோக்கியமாக இருந்த ஹுசைனி ஒரு சில வாரங்களில் காலமானார். அதைத்தொடர்ந்து சீரியல் நடிகர் ஸ்ரீதர் திடீரென காலமானார். அவருடைய இறப்புக்கும் ஹார்ட் அட்டாக் தான் காரணம் என்று கூறப்பட்டது.
நடிகர் ராம்குமார் இறப்பு
அதுபோல பல திரைப்படங்களிலும் சீரியலிலும் குணசித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த நடிகர் ராம்குமார் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது அவரும் காலமானார் என்ற செய்தி வந்தது. அதுபோல நேற்று முன்தினம் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஆண்டனி காலமானார்.
லொள்ளு சபா ஆண்டனி இறப்பு
ஆண்டனிக்கு ஆஸ்துமா பிரச்சனை காரணமாக சில வருடங்களாகவே சிகிச்சை எடுத்து வந்தார். அது போல இடுப்புக்கு கீழே நீர் கோத்து அவரால் நிம்மதியாக படுத்து தூங்க கூட முடியாத அளவிற்கு அவதிப்பட்டு கொண்டிருந்த நிலையில் அவருடைய இழப்பு செய்தியும் சின்னத்திரையில் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த வரிசையில் இன்று ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சீரியல் நடிகர் மரணம்
நடிகர் பிரபாகரனுக்கு சில நாட்களாகவே உடல்நிலை பிரச்சினைகள் இருந்ததாகவும் கடந்த 20 நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. பிரபாகரன் ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலும் நடித்திருக்கிறார்.
அடுத்தடுத்து இழப்பு
விஜய் டிவியில் சமீபத்தில் முடிவுக்கு வந்த பனிவிழும் மலர்வனம் சீரியலிலும் நடித்திருந்தார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். என்னதான் வேலை பளு அதிகமாக இருந்தாலும் அனைவருமே உடல் நிலையில் கவனம் செலுத்துவது இப்போது அத்தியாவசியமாக இருக்கிறது.
ஆரோக்கியம் முக்கியம்
ஆரம்பத்தில் எல்லாம் நூறு வயது வாழ்ந்த பலர் இருந்தார்கள். ஆனால் இப்போது 40 வயதை தாண்டுவதே பெரிய அதிசயம் என்று சொல்லும் நிலை தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அவசரமான உலகில் நம்முடைய சாப்பாடு மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் காரணமாக நம்முடைய உடல் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது. அதற்கு அந்தந்த நேரத்திலேயே சரியான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இப்போது பலருடைய இறப்பு மூலமாக நமக்கு தெரியவரும் அதிர்ச்சிகரமான உண்மையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications