எதிரிக்கு கூட நேத்ரன் நிலைமை வரக்கூடாது! ஹாஸ்பிடலில் நடந்த அந்த சம்பவம்! கண் கலங்கிய ராஜ்காந்த்
சென்னை: சீரியல் நடிகர் ராஜ்காந்த், மறைந்த நடிகர் நேத்ரன் பற்றி சில விஷயங்களை கண்கலங்க பேசி இருக்கிறார். நேத்திரனின் கடைசி காலம் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது, அவர் பட்ட கஷ்டம் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று ராஜ்காந்த் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
சீரியல் நடிகர் நேத்ரன் சினிமா மற்றும் சீரியல்களில் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் சின்னத்திரையில் 22 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். நேத்திரனுடைய மனைவி தீபாவும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று முன்னணி சேனல்களின் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நேத்ரன்- தீபா தம்பதிக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை நேத்ரன் உடல்நிலை குறைபாட்டால் காலமானார். நேத்ரன் கடந்த ஆறு மாத காலமாக புற்று நோய்க்கு சிகிச்சையை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருடைய இறப்பு செய்தியை கேட்டு ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். அதுபோல அவரோடு நடித்த நடிகர்கள் பலரும் அவர் பெற்றி பல தகவல்களை பேசி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ராஜ் காந்த் தன்னுடைய நண்பர் நேத்ரன் பற்றி கண் கலங்க பேசி இருக்கிறார்.
அதில் நேத்ரனை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவரைப்போல ஒரு நபரை நான் என்னுடைய வாழ்க்கையில் பார்க்கவில்லை என்று தான் சொல்வேன். ஆனால் அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிய வந்ததும் அவரை பார்க்க போக முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ஹாஸ்பிடலில் இருக்கிறார் என்று தெரிந்ததும் நான் ஹாஸ்பிடலுக்கு போனேன். அங்கு அவர் ஒரு பெட்டில் படுத்து இருந்தார். அவர் தான் என்று சொன்னால் என்னால் நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு உருவமே மாறி போயிருந்தார்.
நேத்ரன் நன்றாக கலராக இருப்பார், அவர் சிரித்தால் கன்னத்தில் அழகாக குழி விழும் ஆனால் அங்கு பெட்டில் இருந்த உருவத்தை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரி போட்டது. அவருடைய கன்னத்தில் கைவைத்து கண்டிப்பா திரும்பி வந்திடுவடா என்று பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது கூட அவன் ரொம்பவும் தைரியமாக இருந்தான்.
சீக்கிரமாக நான் வந்துருவேன் என்று என்னிடம் சொன்னான். உனக்கு என்ன உதவி என்றாலும் கேளு நான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் செவ்வாய்க்கிழமை அவன் இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும் எனக்கு ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது. நேத்ரனுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. எதிரிக்கு கூட நேத்ரனுடைய நிலைமை வரவே கூடாது.
அந்த அளவிற்கு நேத்ரன் கஷ்டப்பட்டு விட்டார். யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்று ரொம்பவும் ஜாலியாக இருக்கிறவனுக்கு இந்த நிலைமையா? என்பதுதான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கண்டிப்பாக அவருடைய குடும்பத்திற்கு சின்னத்திரை சங்கத்தின் சார்பாகவும், நாங்கள் நண்பர்களும் உதவி செய்வோம் என்று கண் கலங்க ராஜ்காந்த் பேசியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications