திருமணமாகி ஒரு மாதத்திற்குள் சின்னத்திரை பிரபலங்களுக்குள் விவாகரத்து..?அதுக்குன்னு இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஒரு மாதத்திற்கு முன்புதான் காதல் திருமணம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இருவரும் தங்களுடைய திருமண புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் விஷ்ணுகாந்த் வெளியிட்ட பதிவு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது கொள்வது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே பல நடிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் நடிகர்கள் சேர்ந்து இருந்தனர்.
சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலிக்கும் செய்தியை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களிடம் சில மாதங்களுக்கு பிறகு முன்பு தெரிவித்து இருந்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருப்பதாக கூறி இவர்களுடைய காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
விஷ்ணுகாந்த் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் தற்போது முடிவடைந்த ரஜினி சீரியலிலும் இதற்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அது போல சம்யுக்தாவும் நிறைமாத நிலவே என்னும் சீரியல் மூலமாக பிரபலமானவர்தான். இவர்கள் இருவரும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் தங்களுடைய காதலை மறைத்து வைத்திருந்தனர்.

சிப்பிக்குள் முத்து சீரியல் முடிவடையும் நேரத்தில் தங்களுடைய காதலை இருவரும் ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தனர். நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்த்தை டேக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் உன்னை நான் கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றுபவர். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்வில் வந்ததற்கு மிக்க நன்றி என்று கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு கடந்த மாதம் தான் இவர்களுடைய திருமணம் வெகு விமர்சனமாக நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருடைய கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது குறித்து இருவருடைய பதிவுகளிலும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் விஷ்ணுகாந்த் விரைவில் எல்லாம் தெரியவரும் என்று பதில் கொடுத்திருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications