சாந்தி முகூர்த்தத்தில் வந்த அந்த பிரச்சனை.. மொத்தத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த விஷ்ணுகாந்த்
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் அவருடைய மனைவி சம்யுக்தா இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல தகவல்களை கூறி இருக்கிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி திருமணத்திற்கு முன்பே போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்ற காரணத்தை பற்றி வெளிப்படையாக விஷ்ணுகாந்த் பேசி இருக்கிறார்.
விஷ்ணுகாந்த மற்றும் சம்யுக்தா இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷ்ணுகாந்த் தற்போது ஆரம்பத்தில் இருந்தே நடந்த பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்.

விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் சிப்பிக்குள் முத்து என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தங்கள் இருவரும் காதலித்து வந்தனர். சீரியல் முடிவடையும்போது தங்களுடைய காதலை இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் தெரிவித்திருந்தனர். 7 மாதங்களாக காதலித்து வந்த இவர்களுடைய காதல் திருமணத்தில் முடிவடைந்து இருக்கிறது.
மார்ச் மாதத்தில் இவர்களுடைய திருமணம் வெகு விமர்சனமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் ஜோடியாக இல்ல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் இருவரும் காதலிக்கும் செய்தியை சொன்ன பிறகு அடிக்கடி சமூக வலைத்தளத்திலும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தங்களுடைய திருமண புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து டெலிட் செய்திருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராம் லைவில் ஒருவரை மாற்றி ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருந்தனர் அதில் ஆரம்பத்தில் விஷ்ணுகாந்த் தான் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து விஷ்ணுகாந்த் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நோட்ஸ் எடுத்த சம்யுக்தா லைவில் பதில் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து விஷ்ணுகாந்த் அடுத்த லைவில் கேள்வி கொடுக்க என லைவ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்து பேட்டி ஒன்றில் விஷ்ணுகாந்த் எங்களுடைய பிரச்சனை திருமணத்திற்கு முன்பே தொடங்க ஆரம்பித்து விட்டது. திருமணத்திற்கு புடவை வாங்கியது, சாந்தி முகூர்த்தம் எங்க வீட்டில் வைக்க வேண்டும் என்று சொன்னது தான் பிரச்சனை பெரியதாக தொடங்கியது. எங்கள் வீட்டில் வைத்து வைக்கக்கூடாது என்று சம்யுக்தா மற்றும் அவருடைய அப்பா கூறிவிட்டார்கள்.

எங்க வழக்கப்படி அது எங்க வீட்டில் நடப்பது தான். அது அதற்கு ஆரம்பத்தில் சரி என்று சொன்ன சம்யுக்தாவும் அவருடைய அப்பாவும் பிறகு அப்படியெல்லாம் முடியாது கால் சீட்டு பிரச்சனை இருக்கிறது. வேலை இருக்கிறது என்று பல சாக்கு போக்கு சொன்னனர். அதனால் நான் போனை எடுக்காமல் இருந்து விட்டேன். அப்போது சம்யுக்தா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார். அங்கிருந்து எனக்கு போன் செய்து என்னை விசாரித்தார்கள் நான் நடந்ததை எல்லாம் சொன்னேன்.
அதுபோல என்னிடம் காதலை சொல்வதற்கு முன்புவரைக்கும் இன்னொரு நபரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அதுவும் எனக்கு தெரிய வந்தது என்று பல குற்றச்சாட்டுகளையும் விஷ்ணுகாந்த் வைத்திருக்கிறார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications