நாக்க புடுங்குற மாதிரி கேளுங்க..சம்யுக்தாவிற்கு எதிராக அம்மா..விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோ
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய மனைவி சம்யுக்தா பற்றி இரண்டாவது ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
விஷ்ணுகாந்த் காதலிக்கும் போது சம்யுக்தா வேறொரு நபரிடம் பேசிக் கொண்டிருந்தது குறித்து சம்யுக்தாவின் அம்மா அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.
சம்யுக்தா அண்ணா என்று அழைத்த நபர் சம்யுக்தாவின் அம்மாவிடம் பல விஷயங்களை சொல்ல அதற்கு அவர் சம்யுக்தாவிடம் நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேளுங்க என்று கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருடைய குடும்பப் பிரச்சனையும் சமூக வலைத்தளத்தில் சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலிக்கும் போதும் வேறொரு நபரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதற்கான முதல் ஆடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அதை தொடர்ந்து இரண்டாவது ஆடியோ வெளியிட்டு இருக்கிறார். அது நான் ரெக்கார்டு செய்யவில்லை சம்யுக்தாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் எனக்கு சென்ட் பண்ணுனது என்றும் கூறியிருக்கிறார்.
அந்த வீடியோவில் சம்யுக்தா ஒரு நபரை அண்ணன் என்று அழைத்திருக்கிறார். அவர் சம்யுக்தா பற்றி அவருடைய அம்மாவிடம் பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார். அதாவது அந்த நபர் சம்யுக்தா நம்மிடம் ரவி இடம் பேசவில்லை என்று கூறிவிட்டு பேசியிருக்கிறார். அது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, அது எனக்கு தெரியாது என்று சம்யுக்தாவின் அம்மா சொல்லி இருக்கிறார். சம்யுக்தா நம்மிடம் நடித்துவிட்டு ரவியிடம் நாம செய்ற எல்லா வேலையும் சொல்லி இருக்கிறார்.
ரவி எவ்வளவு மோசம் தப்பானவன் என்பதை பற்றி எல்லாம் அவ சொன்னத நாம நம்புறோம். ஆனால்
விஷ்ணுகாந்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது கூட ரவியிடம் பேசி இருக்கிறார். இது எப்படி சரி? அதுவும் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்கிற மாதிரி பேசி இருக்கிறார் என்று சொல்ல அதற்கு சம்யுக்தாவின் அம்மா அதிர்ச்சி அடைந்து எனக்கு இதுவெல்லாம் தெரியாது.

என்னிடம் ஒரு ரெண்டு முறை பேசியிருக்கிறேன் அதுவும் ஏதாவது அவனா கேட்டதுக்கு பதில் சொல்லி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கா. ஆனா இப்படி எல்லாம் பண்ணுவானு எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார். மேலும் இது பற்றி நீங்களே அவ கிட்ட கேளுங்க, நாக்கு புடுங்குற மாதிரி பேசுங்க. அப்பதான் அவ சரி ஆவா, நான் எவ்வளவோ பேசியாச்சு ஆனா கேட்கிறதே இல்ல என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.
தற்போது இந்த ஆடியோ குறித்து ரசிகர்கள் சம்யுக்தாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அதற்கு தன்னுடைய பதில்களையும் கூறி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக சம்யுக்தா தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். அதில் இந்த மாதிரி வெளியான ஆடியோகளுக்கு நான் விரைவில் பதில் சொல்வேன் என்று கூறி இருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications