நேத்ரன் மறைவுக்குப் பிறகு அவருடைய மகள் போட்ட போஸ்ட்.. நெகிழ வைத்த அந்த வார்த்தை! குவியும் பாராட்டு
சென்னை: சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் உடல்நல குறைபாட்டால் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். அவருடைய மறைவுக்கு பிறகு அவருடைய மகள் உருக்கமாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். தந்தையை பற்றி தன்னம்பிக்கையோடு உருக்கமாக போஸ்ட் போட்ட மகளை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பாராட்டி கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
சீரியல் நடிகருக்கு புற்றுநோய்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பொன்னி, முத்தழகு போன்ற சீரியல்களிலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே சீரியல்களிலும் நடித்து வந்த நடிகர் நேத்ரன் கடந்த ஆறு மாதமாக புற்றுநோயோடு போராடி வந்தார். எப்படியும் இந்த நோயிலிருந்து இவர் மீண்டும் வந்து விடுவார் என்று அவரை போலவே அவருடைய ரசிகர்களும், குடும்பத்தினரும் காத்திருந்தனர். ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான செய்தி தான் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தது.

நேத்ரன் மன தைரியம்: நேத்ரனுடைய மன தைரியம் குறித்து அவருடைய இறப்பிற்கு பிறகு பலரும் பேசி வருகிறார்கள். நேத்ரன் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கூட தான் எப்படியும் மீண்டு வந்து விடுவேன், மீண்டும் சூட்டிங் நடிப்பேன் என்றெல்லாம் சொல்லி வந்தார் ஆனால் அவருடைய ஆசை எல்லாம் கனவாகவே போய்விட்டது என்று அவரோடு நெருங்கிய பல சீரியல் நடிகர்கள் கண்கலங்கி வருகிறார்கள்.
அபிநயா போஸ்ட்: அதுபோல நேத்ரன் இறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு அவருடைய மகள் அபிநயா என்னுடைய அப்பாவிற்கு புற்றுநோய் பாசிட்டிவ் என்று உறுதியாகி இருந்தது, அதற்கு பிறகு அவருக்கு ஆபரேஷன் நடைபெற்று விட்டது. ஆனாலும் அவர் ஐசியுவில் இருக்கிறார். எல்லோரும் அவருக்காக வேண்டிக்கோங்க என்று உருக்கமாக ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.

காதல் திருமணம்: அவருக்கு பலரும் ஆறுதல் சொல்லி வந்தனர். அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து தன்னுடைய தந்தை மெல்ல மெல்ல மீண்டும் வந்து கொண்டிருக்கிறார், விரைவில் அவர் நலம் பெற்றதும் இன்ஸ்டாகிராமில் லைவில் ரசிகர்களிடம் பேசுவார் என்றும் கூறியிருந்தார். ஆனால் அந்த மகளின் கனவும் சுக்குநூறாகி போய்விட்டது. நேத்ரன் சீரியல் நடிகை தீபாவை தான் காதலித்து திருமணம் செய்திருந்தார்.
நேத்ரனின் குடும்பம்: நேத்ரன் தீபா தம்பதிக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்ற மகள்கள் இருக்கின்றனர். அபிநயா தன்னுடைய தந்தையோடு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மற்றும் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். அதுபோல கனா காணும் காலங்கள் வெப் சீரிஸின் இரண்டாவது பாகத்திலும் நடித்திருந்தார்.

கனவு நிறைவேறவில்லை: அதுபோலவே அவருடைய இரண்டு மகள்களும் டான்ஸில் திறமையுள்ளவர்களாக இருக்கின்றனர். நேத்ரன் டான்சிலும் நடிப்பிலும் சிறந்தவராக இருந்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 22 வருடங்களுக்கு மேலாக சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நேத்ரனுக்கு எப்படியாவது ஆஸ்கார் அவார்டு வாங்க வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது என்று அவருடைய மனைவி சொன்னதாக சக நடிகர் ஒருவர் உருக்கமாக பேசுகின்றார்.
நேத்ரன் மகளின் பதிவு: அதுபோல நேத்ரனுடைய இறப்பிற்கு பிறகு அவருடைய மகள்கள் நேத்ரனின் இளமை பருவ புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த புகைப்படத்திற்கு “உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க உலகம் தவறிவிட்டது. ஆனால் எங்களுக்கு அப்பா நீங்கள் தான் எப்போதும் எங்களின் மிகப்பெரிய மற்றும் ஒரே பிடித்த ஹீரோவாக இருந்தீர்கள். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல..!! நாங்கள் அதை செய்வோம்” என்று தன்னம்பிக்கையோடு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
இதற்கு பலரும் பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நேத்ரனின் குடும்பத்தினர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்து அவர்களுடைய கனவுகள் மெய்ப்பட நம்முடைய வாழ்த்துக்களையும் ஆறுதல்களையும் சொல்லிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications