திருமணத்தன்றே மாப்பிள்ளையை அம்போவென்று தவிக்க விட்ட தீபிகா தோழிகள்..கலங்கி நின்ற ராஜா வெற்றி பிரபு
சென்னை:கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகாவிற்கும் அதே சீரியலில் நடிக்கும் நடிகர் ராஜா வெற்றி பிரபுவுக்கும் இன்று திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.
இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் மணமேடையில் மாப்பிள்ளை ராஜா வெற்றி பிரபுவை தனியாக நிற்க வைத்த தீபிகாவின் தோழிகள் மேடையில் செய்த சேட்டைகள் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் வெற்றியை தொடர்ந்து தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கனா காணும் காலங்கள் தொடங்கிய ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் அந்த கேரக்டரில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் அபி கேரக்டரில் நடிக்கும் தீபிகாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் கௌதம் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ராஜா வெற்றி பிரபுவும் ரசிகர்கள் அதிகமானோருக்கு பேவரைட் தான். தற்போது இவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிவடைந்து இருக்கிறது. இவர்கள் இருவருடைய திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கும். காரணம், தீபிகா சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு நபரை காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். யார் அவர் என்று கேள்வி அவரிடம் அதிகமாக குவிந்து வந்தது.

ஆனால் ஆனால் பல பேட்டியில் அவர் தன்னுடைய திருமணத்தையும் பற்றி பல தகவல்களை கூறி இருந்தாலும், தான் காதலிக்கும் நபர் யார் என்பதை மட்டும் கூறவில்லை. காரணம் நான் அந்த நபரை காதலிக்கவே இல்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். எனக்கு வீட்டில் திருமண வரன் பார்த்துக் கொண்டிருந்தனர். அதேபோல என்னுடைய நண்பருக்கும் வரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் எதற்காக நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டார். நான் அப்போ எங்க வீட்டில் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தேன்.
எங்கள் வீட்டிலும் அதுபோல அவர்கள் வீட்டிலும் சேர்ந்து தொடர்ந்து திருமணத்திற்கான ஜாதகம் பார்ப்பது போன்ற செயல்களை எல்லாம் செய்தார்கள். எல்லாமே ஓகே என்று ஆன பிறகு எங்களுக்கு இப்போது திருமணம் நடக்கப்போகிறது. அதுவும் இது அரேஞ்ச்ட் மேரேஜ் தான் என் நண்பரே எனக்கு மாப்பிள்ளை என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய என்கேஜ்மென்ட் நாளில் தான் வருங்கால கணவர் ராஜா வெற்றி பிரபு தான் என்று ரகசியத்தை உடைத்து இருந்தார். அதைத் தொடர்ந்து இன்று அவருடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு அவரோடு கனா காணும் காலங்களில் சீரியலில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் தீபிகாவின் தோழிகள் அனைவரும் மேடையில் போட்டிருந்த சோபாவில் ஒன்றாக அமர்ந்து போட்டோ எடுத்தபடி ராஜா வெற்றி பிரபுவை தனியாக தவிக்க விட்டு காத்திருக்க வைத்திருந்தனர். அப்போது ராஜா வெற்றி பிரபு சோகமாக முகத்தை வைத்தபடி பாருங்களேன் என்கிற மாதிரி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
பல திருமண வீட்டில் இந்த நிலைமை தான் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளைக்கும் மாறி மாறி நடக்கிறது. மணப்பெண் தோழிகள் பல நேரங்களில் மாப்பிள்ளையை தவிக்க விட்டு தாங்கள் மட்டும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோல சில வீடுகளில் மாப்பிள்ளையின் தோழர்கள் மணப்பெண்ணை தனியாக நிற்க வைத்துவிட்டு மாப்பிள்ளையோடு சேர்ந்து தங்களுடைய அன்பை மொத்தமாக பரிமாறிக் கொண்டிருப்பார்கள். அதுதான் தற்போது இவர்களுடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
-
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications