என்னால முடியல... ரவீந்தர் தூக்க கலக்கத்தில் கூட அப்படி பண்ண சொல்கிறார்.. புலம்பும் நடிகை மகாலட்சுமி
சென்னை: சீரியல் நடிகையான மகாலட்சுமி கடந்த 2022 ஆம் ஆண்டு தான் தயாரிப்பாளர் ரவீந்திரரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருந்தார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது மோசடி புகார் ஒன்று தொடுக்கப்பட்ட நிலையில் ஜெயிலுக்கு போயிட்டு ஜாமினில் ரவீந்தர் வெளியே வந்திருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ரவீந்தர் பற்றி மகாலட்சுமி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வருடத்தில் சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய திருமணம் என்றால் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் தான். சீரியல் நடிகையான மகாலட்சுமி அதிகமான சீரியல்களில் குணசித்திர வேடங்களிலும் வில்லியாகவும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதோடு 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
விஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மகாலட்சுமி இப்போது சீரியல் நடிகையாக முழு நேரமாக தன்னுடைய கவனத்தை நடிப்பில் செலுத்தி வருகிறார். அதுபோல அடிக்கடி மகாலட்சுமி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. முதல் திருமணம் மகாலட்சுமிக்கு பெரிய அளவில் பிரச்சினையாக முடிந்தது. அந்த பிரச்சனை முடிந்ததும் சீரியல் நடிகர் ஒருவரோடு மகாலட்சுமிக்கு தொடர்பு என்ற வதந்தியும் பெரிய அளவில் பரவி வந்தது.
சமீபத்தில் அந்த வதந்தி அடங்கிய கொஞ்ச நாளுக்குள் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். ரவீந்தர் உடல் எடை அதிகமாக இருப்பதால் அது குறித்து அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால் அதைப் பற்றி ரவீந்தர் எப்போதும் கண்டு கொண்டதே கிடையாது. தன்னுடைய உடல் அமைப்பை குறித்து அவரே பல இன்டர்வியூகளில் கிண்டல் செய்து கொள்வதும் வாடிக்கையாக நடக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரவீந்தர் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிய அளவில் பிரபலமாக இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரவீந்தரின் உடல் எடையை குறைக்க நாங்கள் பல முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அவர் முறையான டயட்டை பின்பற்றுவது கிடையாது.
அவரோடு ஒன்றாக நானும் அங்கே இருப்பதால் என் டயட்டையும் பின்பற்ற முடியாமல் போய்விடுகிறது. நான் என்னுடைய டயட்டை தொடர வேண்டும் என்று நினைக்கும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தாலும் என்னை எழுப்பி சாப்பிட வைத்து விடுகிறார். அதனால் என்னுடைய டயட்டை நான் மெயின்டன் பண்ண முடியவில்லை. நான் அதிகமாக சாப்பிட மாட்டேன்.
ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் வயிறு முட்ட சாப்பிட்டு விடுவேன் என்று மகாலட்சுமி பேசியிருக்கிறார். சமீபத்தில் கூட ரவீந்தர் ஜெயிலுக்கு போய் இருந்த நேரத்தில் உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் தான் பட்ட வேதனை குறித்து உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிலையில் இனியாவது மகாலட்சுமி சொல்வது போன்று டயட்டை பாலோ பண்ணலாமே என்று பலர் ரவீந்தருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications