வதந்தியை பரப்பாதீங்க.. உண்மை வெளிவரும்! நான் காத்திருக்கிறேன்.. பிரியங்கா நல்கரி திடீர் போஸ்ட்
சென்னை: சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பற்றி வதந்தி பரப்பாதீர்கள். எதுவும் தெரியாமல் நீங்களாக கற்பனை செய்யாதீர்கள். நான் நளதமயந்தி சீரியலில் இருந்து விலகவில்லை என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் சீரியல் நடிகை பிரியங்கா நகரில் ரோஜா சீரியல் மூலமாக புகழின் உச்சத்தில் வளம் வந்தவர். இவர் முதல் முறையாக தமிழில் அறிமுகமானது ரோஜா சீரியல் தான். ஆனால் அந்த சீரியலிலால் அவரே எதிர்பார்க்காத அளவிற்கு சின்னத்திரையில் அவருக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்கரி போட்டோ ஷூட் நடத்தி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ரோஜா சீரியல் முடிவுக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் கதாநாயகியாக கமிட் ஆனார். இந்த நேரத்தில் தான் அவர் பல வருடங்களாக காதலித்து வந்த அவருடைய காதலர் ராகுல் என்பவரை திடீர் திருமணம் செய்திருந்தார். ஏற்கனவே ராகுலோடு பிரியங்காவிற்கு பல வருடங்களுக்கு முன்பே எங்கேஜ்மென்ட் முடிவடைந்து விட்டது.
ஆனால் எங்கேஜ்மென்ட்க்கு பிறகு கருத்து வேறுபாடல் தாங்கள் பிரிந்து விட்டதாக பிரியங்கா சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்த நேரத்தில்தான் திடீரென்று இவருடைய திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதற்கு பிறகு சில மாதங்களில் பிரியங்கா சீதாராமன் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். அதற்குப் பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியல் மூலமாக நடிக்க தொடங்கியிருந்தார்.

இப்போது இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக இவர் ஆக்சிடெண்ட் ஆகி இறப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. இதனால் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டாரா...? அவர் விலகியதால் தான் இவர் இறந்துவிட்டார் என்று கதையை மாற்றுகிறார்களா? என்ற கேள்விகள் இணையத்தில் அதிகமாக இருந்து வருகிறது. அதுபோல பிரியங்கா இந்த சீரியலில் இருந்து விலகியதும் நடிகை ஸ்ரீநிதி முக்கிய கேரக்டரில் இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது.
அதை ஸ்ரீநிதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் பிரியங்கா இதை மறுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்று வைத்திருக்கிறார். அதில், "உங்களுக்கு தேவையானதை அதிகமாக கற்பனை செய்யாதீர்கள். அதேபோல வதந்திகளை பரப்பாதீர்கள் நான் சீரியலில் இருந்து வெளியேறவில்லை.
என்னுடைய அடுத்த செடியூலுக்காக காத்திருக்கிறேன். என்ன நடந்தது என்ன காரணம் என்பதை நீங்கள் அனைவரும் விரைவில் தெரிந்து கொள்வீர்கள் நன்றி..!" என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அப்போ இப்போதைக்கு தமயந்தி அதாவது பிரியங்கா இறந்து போவது போன்று காட்சிகள் வைத்து விட்டு சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர் உயிரோடு வருவது போன்று காட்சிகள் வருமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications