Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை ரச்சிதாவின் "அந்த மாதிரி” குற்றச்சாட்டு.. தினேஷ் சொன்ன வார்த்தை.. பதிவில் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய கணவர் குறித்து பரபரப்பான போலீஸ் கம்ப்ளைன்ட் ஒன்று நேற்று இரவு மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறார்.

அதன் காரணமாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற தினேஷ் அங்கு ரச்சிதா கம்ப்ளைன்ட்டுக்கு பதில் கொடுத்து இருக்கிறாராம்.

அதைத்தொடர்ந்து ரச்சிதா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.

Serial actress Rachita Mahalakshmis response to her husband Dineshs complaint

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி இப்ப வரைக்கும் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் மீனாட்சி ஆக வலம் வந்து கொண்டிருக்கும் ரச்சிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார்.

அறிமுகமான முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் தினேஷ் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சீரியலில் அறிமுகமான சில மாதங்களுக்குள் இவர்களுடைய காதல் அனைவருக்கும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதற்குப் பிறகு இருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். குறிப்பாக பேட்டிகளில் இவர்கள் அதிகமாக இடம் பிடித்து இருந்தனர். அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் ரச்சிதா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் "நாச்சியார் புறம்" என்ற சீரியலிலும் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக நடித்திருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தினேஷ் சில பேட்டிகளில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கூட தாங்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை பேசி தீர்க்கும் வகையில் தான் இருக்கிறது என்றும், நாங்கள் மனம் விட்டு பேசினால் சீக்கிரம் எல்லாம் மாறிவிடும் என்றும் கூறியிருந்தார். ரச்சிதாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான ஆதரவு தெரிவித்து தன்னுடைய ஓட்டு அளித்து அனைவரிடமும் ஓட்டு அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா தினேஷ் கார்த்திக்கை புரிந்து கொண்டு மீண்டும் சேர்ந்து விடுவார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இத்தனை மாதங்களாக இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென ரச்சிதா சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் கார்த்திக் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்.

சில தினங்களாகவே தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதும் மற்றும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் ரச்சிதா புகார் கொடுத்து இருக்கிறார். அதற்காக போலீஸ் நிலையத்தில் ஆஜரான தினேஷ் ரச்சிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றிருக்கிறார்.

இந்த புகார் தொடர்பாக ரச்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரிகளை வைத்திருக்கிறார். அதில், When you build silence, people don't know when to attack என்று தன்னுடைய புகைப்படத்தை வைத்து ஒரு ஸ்டோரியும், அதுபோல இன்னொரு ஸ்டோரியில் Being strong is the only option left.... என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் இப்பதானே ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து மாமியார் சூழ்ச்சியால் தினேஷ் ஜெயிலுக்கு போயிட்டு வெளியே வந்திருக்கிறார். அதற்குள் மீண்டும் ரச்சிதா ஜெயிலுக்கு போக வச்சிட்டாரே என்று சிலர் கருத்து தெரிவிக்க, சின்ன திரையில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஜோடி பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள். அதில் இந்த வாரம் இவர்களா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+