இணையத்தை தெறிக்க விடும் விவாகரத்து போட்டோ சூட்..பிரபல நடிகை செய்த செயல்.. காரணம் இதுதானாம்
சென்னை: சின்னத்திரை நடிகை ஷாலினி விவாகரத்து பெற்றதை போட்டோ சூட் எடுத்து கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் இந்த விவாகரத்து போட்டோ சூட் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.
விவாகரத்து பெற்று விட்டால் அழுது கொண்டு வீட்டுக்குள்ளே முடங்க வேண்டாம், அது தோல்வி அல்ல வெற்றி என சீரியல் நடிகை பல தகவல்களையும் கூறி இருக்கிறார். அதை பார்ப்போம்,
தற்போதைய சூழ்நிலையில் போட்டோ ஷூட் மோகம் பலரையும் ஆட்டி படைத்து வருகிறது. தங்களுடைய அழகையும், மறக்க முடியாத நினைவுகளையும் விதவிதமாக அனுபவித்து போட்டோ சூட் எடுக்கும் மோகம் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் பிடித்திருக்கிறது. இதுவரைக்கும் மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக கிளிக் செய்து கொண்டு இணையத்தை தெறிக்க விட்டுக் கொண்டு இருந்த பிரபலங்கள் தற்போது விவாகரத்து பெற்றதையும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போதைய மார்டன் உலகில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சில தருணங்கள் தங்களுடைய வாழ்வில் மறக்க முடியாது என்று நினைப்பதை போட்டோ எடுத்து அதை ஒரு அனுபவமாக மாற்றுவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த மாதிரி தான் சீரியல் நடிகையான ஷாலினி தான் விவாகரத்து பெற்றதை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி பல்வேறு கருத்துக்களையும் பெற்று வருகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லாமல் இருந்தது, ஆனால் தற்போதைய நிலையில் பெண்களின் சுதந்திரம் இவர் எடுத்த போட்டோ சூட்டில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். சீரியல் நடிகை ஷாலினி ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் எனும் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர்மாம் நிகழ்ச்சியில் அவரும் அவருடைய மகள் ரியாவும் கலந்து கொண்டிருந்தார்.
நடிகை ஷாலினிக்கு ஏற்கனவே மேட்ரிமோனியம் மூலமாக வீட்டில் பார்த்து ஒரு திருமணம் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த திருமண வாழ்க்கை ஒரு சில மாதங்கள் கூட நீடிக்க வில்லையாம். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகிவிட்டதாம். அதற்கு பிறகு தான் ரியாஸ் என்கிற நபரை இவர் சந்தித்தாராம். இவர் தனியாக வாழ்ந்து வந்த நேரத்தில் ரியாஸ் ஆரம்பத்தில் இவரிடம் ஒரு ரசிகர் என்று பழகி பின்பு காதலிக்கும் செய்தியை கூறினாராம். அப்போதே அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் மனைவியோடு இல்லை என்று கூறியதாக ஷாலினி கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் ரியாஸை, ஷாலினி அளவுக்கு அதிகமாக காதலித்து வந்தாராம். குழந்தைகள் விஷயத்தில் ஷாலினி அதிகமாக பாசத்தோடு எதிர்பார்த்து இருந்த நிலையில், ஷாலினி கர்ப்பமாக இருந்திருக்கிறார். அவருக்கு பெண் குழந்தையும் பிறந்து இருக்கிறது. ஆனால் ரியாஸ் பலமுறை ஷாலினியை அடித்து துன்புறுத்தியதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் ரியாஸ் வேறு சில பெண்களோடும் தொடர்பில் இருந்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் ஷாலினி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரியாசுடன் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற என்ற செய்தியை போட்டோ சூட் எடுத்து இணையத்தை தெறிக்க விட்டிருக்கிறார். அதிலும் இந்தியாவில் முதல் முறையாக இவர்தான் விவாகரத்து பெற்று அதை போட்டோ சூட் எடுத்தார் என்ற பெருமையும் இவர் பெற்றிருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் விவாகரத்து போட்டோ சூட் குறித்து ஷாலினி ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் குரல் இல்லாமல் இருப்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி, மோசமான திருமணத்தை விட்டு விலகுவது பரவாயில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். அந்த மகிழ்ச்சி ஒருபோதும் குறையாமல் இருக்க, உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தேவையான மாற்றங்களை செய்யுங்கள்.
விவாகரத்து ஒரு தோல்வி அல்ல, இது உங்களுக்கு ஒரு திருப்புமுனை. உங்கள் வாழ்க்கையில் நேர்மறை யான மாற்றங்களுக்கு வழி வகுத்தது. திருமணத்தை விட்டு விலகி தனிமையில் நிற்பதற்கு மிகுந்த தைரியம் தேவை. அதனால் வெளியில் இருக்கும் ஏன் துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை அர்ப்பணிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications