மணக்கோலத்தில் இருக்கும் “மௌனராகம் சீரியல்” ஜோடி.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீசன் 2 சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஷில்பா மற்றும் சல்மான் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்ததும் இவர்கள் இருவருக்கும் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து விட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்தப் புகைப்படங்களுக்கு சல்மான் மற்றும் ஷில்பா விளக்கம் கொடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவருடைய புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெள்ளி திரையைப் போலவே சின்னத்திரையில் ஒரு சில சீரியல்கள் வெற்றி அடைந்து விட்டால் அதைத் தொடர்ந்து அதில் இரண்டாவது மூன்றாவது பாகம் தொடங்குவது வழக்கம் தான். அந்த மாதிரி தான் விஜய் டிவியில் கூட மௌனராகம் சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. முதல் பாகம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தது.

ஆனாலும் கொரோனா தொற்றின் காரணமாக தற்காலிகமாக அந்த சீரியல் முடிவுக்கு வந்திருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டது. முதல் பாகம் 863 எபிசோடுகளுடன் நிறைவு பெற்று இருந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாவது பாகமும் கிட்டத்தட்ட 500 எபிசோடுகளுக்கு மேலாக ஒளிபரப்பானது. ஆனால் கடத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த இரண்டாவது பாகம் முடிவுக்கு வந்தது.

அதுபோல மௌனராகம் இரண்டாவது பாகத்தில் நடிகை ரவீனா அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த ரவீனா கதாநாயகியாக நடித்திருந்தார். அதுபோல அவரோடு ஷில்பா, சல்மான் ஆகிய பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அவர்களும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டனர். சீரியலை தாண்டி சமூக வலைதளத்திலும் இவர்கள் ஆக்டிவாக இருந்ததால் இவர்களுக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சல்மான் மற்றும் ஷில்பா ஆகிய இருவரும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார்கள். இந்த சீரியலுக்கு எங்கேஜ்மென்ட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சீரியலுக்கான போட்டோஷூட் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களை ஷில்பா மற்றும் சல்மான் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர்.

இந்த புகைப்படங்களை பார்த்ததும் இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே எங்கேஜ்மென்ட் ஆகிவிட்டதாக நினைத்து பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் இது "எங்கேஜ்மென்ட்" என்ற புதிய சீரியலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று அவர்கள் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications