90ஸ் ஃபேவரைட் நடிகை ஸ்ரீதுர்காவை நினைவு இருக்கிறதா?இந்த பிரபலம் தான் கணவரா?உருக்கமாக வெளியிட்ட பதிவு
சென்னை: சீரியல் நடிகை ஸ்ரீ துர்கா தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரைட் சீரியல் நடிகை ஸ்ரீ துர்கா தற்போது சீரியல்களை விட்டு விலகி இருக்கிறார்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் ஸ்ரீ துர்கா தன்னுடைய நடிப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒரு சில நடிகைகள் தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருப்பார்கள். அந்த வகையில் ஒருவர் தான் ஸ்ரீ துர்கா. இவர் அதிகமான சீரியல்களில் நடித்திருந்தாலும், அமைதியான கதாபாத்திரங்களிலும், அழுகை கதாபாத்திரத்திலும் தான் அதிகமாக நடித்திருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே சினிமா சீரியலில் நடித்து வரும் இவர் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்தவர் தான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சின்ன திரையில் துர்கா கலக்கி வருகிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான உறவுகள், தியாகம், முந்தானை முடிச்சு போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
அதோடு கேப்டன் டிவியில் நிகழ்ச்சி ஒன்றையும் இவரே தயாரித்தும் வழங்கி இருக்கிறார். இதுவரைக்கும் இவர் நடித்து வந்த சீரியல்களில் அமைதியாக பொறுமையான கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்திருந்தார். ஆனால் ஊஞ்சல், அலைகள், சிகரம் போன்ற சீரியலில் இவருடைய கேரக்டர் அதிகமாக பேசப்பட்டு வந்தது. அதிலும் ஊஞ்சல் சீரியலில் முதலில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். பிறகுதான் அந்த சீரியலில் இவர் தவறை உணர்ந்து பிறகு திருந்தி வாழும் பாசிட்டிவ் கேரக்டராகவும் நடித்து மனதை கவர்ந்திருப்பார்.
கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியலில் துரைசிங்கத்தின் சகோதரியாக நடித்திருப்பார். பிறகு அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் இவர் பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் ஜாலியாக மற்றவர்களை சிரிக்க வைக்கும் கேரக்டரில் நடிப்பதற்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அந்த மாதிரி நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது இல்லையே என்று நான் வருந்துகிறேன்.
ஜெயா டிவியில் பொய் சொல்ல போறோம் என்ற சீரியலில் ஒரு டிராக் மட்டும் காமெடி செய்திருப்பேன். அந்த கேரக்டரில் நான் விரும்பி நடித்தேன். அது மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களும் நடித்திருக்கிறேன். எனக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பா நடிப்பேன். எனக்கு நடிப்பு தவிர பாடுவது ஆடுவதும் ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் என்னுடைய குடும்பமே ஒரு சங்கீத குடும்பம். நானும் முறைப்படி சங்கீதம் கற்று இருக்கிறேன். அதனால் அந்த துறையில் வர வேண்டும் என்று நினைப்பேன். அதை தவிர சின்ன வயதிலிருந்து போட்டோ எடுப்பதில் எனக்கு ஆசை அதிகம். அதனால் சினிமா போட்டோகிராபராக வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு தான் இவர் கௌதம் என்பவரை திருமணம் செய்து இருக்கிறாராம். தற்போது தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications