முன்னாள் முதல்வருடன் இணைத்து AI வீடியோ போடுறாங்க! பயமாயிருக்கு..! சீரியல் நடிகை வைஷாலி உருக்கம்
சென்னை: சீரியல் நடிகை வைஷாலி தனிகா சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் நடக்கும் ட்ரோல்களும் தற்போது பேசு பொருளாகி உள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து அவருக்கு ஆதரவாக பேசி வந்தவர் வைஷாலி.
தேர்தல் சமயத்திலும் விஜய்க்கு ஆதரவாக தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதனால் அவர் தவெக ஆதரவாளர் என்று அடையாளத்தில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருந்தார். ஆனால் சமீபத்தில் மின்சார கட்டணம் தொடர்பாக பொதுமக்களின் பிரச்சனையை சுட்டிக்காட்டி வைஷாலி வெளியிட்ட ஒரே வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை வைஷாலி வீடியோ
தங்களுடைய வீட்டிலும் மின்சார கட்டணம் அதிகமாக வந்திருப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட இலவச மின்சாரம் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். 200 வாட்ஸ் மின்சாரம் இலவசம் என்று விஜய் முதலில் கையெழுத்து போட்டதும் சந்தோஷமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் கூட பாத்திங்களா எங்க அண்ணன் முதல் கையெழுத்து எதுன்னு தெரியுதா என்று சந்தோசமாக பேசுகிறார்.

ஆனால் இப்போது சில மாதங்களாக அளவுக்கு அதிகமாக மின்சார கட்டணம் வருவதாக ஒரு வீடியோவில் அவர் கூறியிருந்தார். அவர் இந்த வீடியோ வெளியிட்டதும் அவ்வளவுதான் அதற்கு பிறகு வைஷாலியை குறி வைத்து சோசியல் மீடியாவில் ட்ரோல்கள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் வைஷாலி இதற்கு முன்பு எடுத்த புகைப்படங்களை இப்போது ஷேர் செய்து அதை வைத்து கேலி செய்து வருகின்றனர்.
ஏஐ வீடியோ
அதுமட்டுமல்லாமல் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் வைஷாலி டான்ஸ் ஆடுவது போல ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவையும் சோசியல் மீடியாவில் பரப்பி வருகிறார்கள். அதை பார்த்ததும் வைஷாலி, நான் ஒரு தவெக ஆதரவாளராக இருந்தபோதே ஒரு பொது பிரச்சனைக்காக குரல் கொடுத்ததற்காக ஒரு பெண்ணை இப்படி அவமதிப்பது நியாயமா? சீரியஸ்லி நான் சொல்வது தவறாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.
ஆனால் என் குடும்பத்தை வைத்து ஏஐ வீடியோக்களை உருவாக்குவதும், முன்னாள் முதல்வருடன் டான்ஸ் ஆடுவது போல வீடியோக்களை உருவாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதெல்லாம் எங்க போய் முடியும் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது என்று வைஷாலி கூறி இருக்கிறார். அரசியலில் கருத்து மாறுபடலாம், ஒருவர் சொல்வது பிடிக்கவில்லை என்றால் அதை விமர்சிக்கலாம். தவறாக இருந்தால் ஆதாரத்துடன் எதிர்த்து பேசலாம்.
நடிகை வைஷாலி வேதனை
ஆனால் ஒரு பெண்ணின் குடும்பத்தை இழுத்து தவறாக பேசுவதும், அவரை அவமானப்படுத்தும் வகையில் போலியான அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை பரப்புவதும் தவறு என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள். வைஷாலி சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சையமான முகம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, மாப்பிள்ளை, பாண்டியன் ஸ்டோர்ஸ், கோகுலத்தில் சீதை, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார். சினிமாவிலும் சர்க்கார், ரெமோ, சீமராஜா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட இப்போது மின் கட்டணம் குறித்து வெளியிட்ட வீடியோ தான் செம வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications
