உடன் நடிப்பவர்களுடன் உண்மையான உறவு ஃபீலிங் வந்துவிடுகிறது!
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும்போது உடன் நடிப்பவர்கள் அம்மா அப்பா என்று குடும்பமாக நடிக்கும்போது அவர்களுடன் உண்மையான உறவு ஏற்பட்டு பொஸசிவ் வந்துவிடுகிறது என்று ஒரு சீரியல் நடிகை சொன்னார்.
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் சீரியல் நடிகைகள் மற்றும் அவர்களது ரசிகைகளுக்கான விவாதம் நடைப்பெற்றது.
அப்போது பேசிய நடிகைகளும், அவர்களது ரசிகைகளும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

கோபமே வராது
எனக்கு எப்போதும் கோபமே வராது. வீட்டில், ஏதாவது பிரச்சனை என்றால் கூட அது என்னை பாதிக்காது. அப்படிப்பட்ட கேரக்டர் நான். சீரியலில் வில்லியா நடிச்சு.. பார்க்கறவங்ககிட்டே எல்லாம் கோபப்பட ஆரம்பிச்சுட்டேன். கேப் டிரைவர்கிட்டே கூட இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கோபமா கேட்க ஆரம்பிச்சுட்டேன். அப்புறமாத்தான் இது நம்ம கேரக்டர் இல்லையே.. நடிக்க ஆரம்பிச்சு அதே கேரக்டரில் ஒன்றி விட்டோம் என்று கொஞ்சம் கட்டுப்படுத்திக்க ஆரம்பிச்சேன் என்று கூறினார் ஒரு நடிகை.

வில்லியா நடிச்சு
பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ், நான் எல்லா சீரியலிலும் வில்லியா நடிச்சு நடிச்சு என் முகமே இறுகிப் போன மாதிரிதான் எப்போதும் பார்க்கறவங்களுக்கு தோணும். வீட்டுக்கு போனா குழந்தைங்க கிட்டே கூட கோபமா பேசற மாதிரி ஆயிருச்சு. எங்கியாவது கடைக்கு போனால் கூட குழந்தைங்க என்னை பார்த்துட்டு பயந்து போயி ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.

அழுது இருக்கேன்
இதை பார்த்து எத்தனையோ முறை மறைஞ்சு நின்னு அழுது இருக்கேன். என்று சொன்னார் சாந்தி வில்லியம்ஸ். இவர் இப்போது சன் டிவியில் நடித்து வரும் சந்திரலேகா சீரியலில் எப்போதும் சந்திராவுக்கு விஷம் வைப்பதும், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்க நினைப்பதும் என்று கொடூர செயல்களையே செய்து கொண்டு இருப்பார்.

உடன் நடிக்கும் உறவுகள்
உடன் நடிக்கும் உறவுகள் அம்மா, அப்பா என்று எப்போதும் அவர்களுடனே டிராவல் செய்துகிட்டு இருப்பதால் அவங்க கூட உண்மையான உறவு அன்பு எல்லாம் வந்துரும். அவங்க வேற யார்கிட்டேயாவவது பேசினால் பொஸசிவ் கூட வந்துரும் என்று ஒரு நடிகை சொல்ல, அப்போது உடன் ஜோடியாக நடிப்பவர்களிடமும் அப்படி நினைப்பு வருமா என்று கோபிநாத் கேட்டார்.

அப்படி இல்லை
அப்படி இல்லை என்று அந்த நடிகை மறுத்து பேச, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை அப்படி நிச்சயம் வரும் எனக்கு வந்து இருக்கு. உடன் நடிப்பவர்கள் நமக்குத்தான் சொந்தம் என்பது போல. ஆனல், நான் சித்ராவா மாறி இது நடிப்புதான்னு சொல்லி மனசுக்கு கேட் போட்டுகிட்டேன் இப்படி நிச்சயம் வர வாய்ப்பு இருக்கு என்று சொன்னார்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications