Shahrukh: ஷாருக்கான் பணியாளருக்கு மாத வீட்டு வாடகை இத்தனை லட்சமா? பாட்ஷா பாயை பாராட்டும் ரசிகர்கள்!
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வீட்டில் வேலை செய்யும் நபர் தனது வீட்டிற்கு இத்தனை லட்சத்தை வாடகையாக கொடுக்கிறார் என்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. இதனால் ஷாரூக்கான் தனது பணியாளர்களுக்கு சம்பளத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறாரோ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனின் வீடு ஜல்சா பகுதியிலும், சல்மான் கானின் வீடு காலக்ஸி அபார்ட்மென்டிலும் உள்ளது. அது போல் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமாக மும்பை மன்னத் வீடு இருக்கிறது. அந்த வீட்டில் தற்போது புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் ஷாருக் கான் தற்போது பாந்த்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.
இந்த புதுப்பிப்பு பணிகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த வீடு சிறியதாக இருப்பதாகவே அடிக்கடி ஷாரூக் கான் கூறிவந்தாராம். இந்த நிலையில் அந்த வீட்டில் மேலும் இரு தளங்களை கட்ட மனைவி கவுரி திட்டமிட்டுள்ளார்.
ஷாருக்கான்
இந்த வீட்டை ஷாருக்கான் 2001 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார். இந்த பங்களா மொத்தம் 27 ஆயிரம் சதுர அடி கொண்ட பழங்காலத்து வீடாகும். அப்போது இந்த வீட்டை 13 கோடிக்கு வாங்கினார். இந்த வீடு 24 ஆண்டுகள் கழித்து தற்போது ரூ 200 கோடி மதிப்பாகும்.
பங்களா பெயர்
இந்த பங்களாவின் பெயர் மன்னத். இதன் ஒரிஜினல் பெயர் வில்லா வியன்னா ஆகும். இந்த வீட்டை பாய் கோஷெத் பானு சஞ்சனா எனும் அறக்கட்டளையிடம் இருந்து 2001 ஆம் ஆண்டு வாங்கிய ஷாருக்கான் 2005 ஆம் ஆண்டு மன்னத் என பெயர் மாற்றினார். இதற்கு முன்பு ஷாருக் வைத்திருந்த வீட்டின் பெயர் ஜன்னத் (Jannat), அதாவது சொர்க்கம் என்று அர்த்தம்.
பிரார்த்தனை என்று அர்த்தம்
தற்போது இந்த வீட்டை Mannat என பெயரிட்டுள்ளதன் அர்த்தம், பிரார்த்தனை என்பதாகும். இந்த வீடு 6 அடுக்குகளை கொண்டது. 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த வீடு குறித்து ஷாருக் கூறுகையில், "என் பெற்றோர் இறந்த பிறகு எனக்கென ஒரு வீடு இல்லை. இந்த மன்னத் வீட்டை நான் வாங்கியது என் வாழ்வில் மிகவும் கடினமான ஒன்று. இந்த வீட்டில் எனது பேர பிள்ளைகளும் ஒரு நாள் வசிப்பார்கள்" என்றார்.
என்னென்ன வசதிகள்
இந்த வீட்டில் நிறைய படுக்கை அறைகள், ஜிம், நீச்சல் குளம், நூலகம் உள்ளிட்டவை உள்ளன. தற்போது வீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் ஷாருக் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். இந்த வீட்டிற்கு மாத வாடகை ரூ 24 லட்சம் ஆகும். ஷாருக்கான் வீட்டு பணியாளர்களுக்கு என மன்னத் வீட்டிலேயே தனி குடியிருப்புகள் இருந்ததாம். இந்த நிலையில் தற்போது ஷாருக்கே வாடகை வீட்டிற்கு வந்ததால் வீட்டு பணியாளர்களுக்கு ரூ 1.35 லட்சம் மாத வாடகையில் வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.
வீட்டு வாடகை
இந்த வீட்டு வாடகையை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாருக்கானை ஆஹா ஓஹோ என பாராட்டி வருகிறார்கள். மேலும் வீட்டு பணியாளர்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பாட்ஷா என்றால் சும்மாவா என்ன என்றும் ரசிகர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications