அஞ்சலி படத்தில் தேசிய விருது வாங்கிய ஷாமிலி... நடிகர் அஜித்தின் கொழுந்தியாள் இப்போ என்ன பண்ணுறாங்க தெரியுமா?
சென்னை: நடிகை ஷாலினியின் தங்கச்சியான நடிகை ஷாமிலி சோசியல் மீடியாவில் போட்ட போஸ்ட் தான் இணையத்தில் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது. அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பார்த்தவரா இப்போ இப்படி மாறிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கிறார்கள். நடிப்புக்கு டாடா காட்டிய ஷாமினி இப்போ தான் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகை ஷாமினி தற்போதைய நிலை
ஷாமினி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த போட்டோவை பார்த்ததும் முதலில் அட இது ஷாலினி தானே என்று ரசிகர்கள் நினைத்து இருக்கிறார்கள். காரணம் ஷாமிலியின் தற்போதைய தோற்றம் அவருடைய அக்காவை அப்படியே ஞாபகப்படுத்தும் வகையில் இருக்கிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே ஷாமிலி அவங்க அக்கா மாதிரியே மாறிட்டாங்களே என்று கமெண்ட்களை கொட்டுகின்றனர்.

இன்னும் ஒரு சிலர் நீங்க ஏன் சினிமாவை விட்டு போயிட்டீங்க என்ற கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் என்னதான் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கு ஷாமினி எந்த பதிலும் சொல்லாமல் தான் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையைப் பற்றி மட்டும் பகிர்ந்து இருக்கிறார். அதாவது தான் நடிப்புக்கு டாட்டா போட்டு இருந்தாலும் தனக்கு பிடித்த ஓவியத்துறையில் கலக்கி வருவதை காட்டி இருக்கிறார்.
ஓவியரான நடிகை
விதவிதமான ஓவியத்தை வரைந்து அதற்கு தானே மாடலாகவும் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் இது நீங்க வரைந்தீங்களா? உண்மைய சொல்லுங்க? என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அவர் கருப்பு நிற உடையில் வெளியிட்டிருந்த Back To Bold old பதிவு ரசிகர்களுடைய அதிக வரவேற்பு பெற்றது.
Simbu: அஜித்தை நேரில் சந்தித்த காரணமே இதுதான்! வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த சிம்பு
அதற்கு முன்பு புடவையிலும் வெளியிட்டு இருந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது தான். ஷாமிலி அவங்க அக்கா ஷாலினி போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிப்பை தொடங்கிவிட்டார். அதுவும் 2 வயதிலே கேமரா முன்பு நின்று விட்டார். விஜயகாந்த் நடித்த ராஜநடை படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

நடிகர் அஜித்தின் குடும்பம்
அந்த சமயத்தில் தான் ஷாமிலியின் வாழ்க்கையை மாற்றிய படம் வந்தது. அது மணிரத்தினம் இயக்கிய அஞ்சலிதான். அந்த படத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக அவர் நடித்த விதம் இந்தியா முழுவதும் பாராட்டை பெற்றது. அந்த படத்திற்காகவே சிறந்த குழந்தைக்கான தேசிய விருதையும் வென்றிருந்தார். அதோடு தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில அரசுகளின் குழந்தை நட்சத்திர விருதுகளையும் பெற்றிருந்தார்.
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம்
குழந்தை நட்சத்திரமாக சிலர் நன்கு பிரபலம் அடைந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் ஹீரோவாவோ அல்லது ஹீரோயினியாகவோ வரும்போது அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதேபோலத்தான் ஷாமிலிக்கும் மாறிவிட்டது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவர் ஹீரோயினியாக நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

அதற்கு பிறகு நடிப்பை குறைத்து தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். ஷாமிலி நடிகை ஷாலினியின் தங்கை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் சகோதரி. நடிகர் அஜித்குமார் இவருக்கு அவருக்கு மைத்துனர். அதனால் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை ஷாமிலி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவார்.
ஷாமிலி சமீப காலமாக நாட்களாக சினிமாவில் வரவில்லை என்றாலும் இப்போ சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் அப்போ இவர் மீண்டும் சினிமாவுக்கு வரப் போகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
