லாபத்தில் பங்கு சிவகார்த்திகேயனுக்கு? மதராஸி ரூ.70 கோடி வசூல்.. குறுக்கே காந்தி கண்ணாடி வேற: பிரபலம்
சென்னை: உண்மையிலேயே கேபிஒய் பாலா நடித்த காந்தி கண்ணாடி சிறந்த படம் என்றால், அதை தானாகவே மக்கள் பேசுவார்கள்.. இத்தனைக்கும் மீடியம் பட்ஜெட்டில் எடுத்து, நன்றாகவே காந்தி கண்ணாடி கலெக்ஷன் செய்யப்பட்டுள்ளது.. அப்படியிருந்தும் அப்படக்குழுவினர் ஏன் புலம்புகிறார்கள் என்று தெரியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கருத்து தெரிவித்துள்ளார்.
காந்தி கண்ணாடி படத்தை பல தியேட்டர்களில் போட விடாமல் சிலர் சதி செய்வதாகவும், தனது படத்தின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சிலர் திட்டமிட்டே கிழித்து எறிவதாகவும் படக்குழுவினர் கூறிவருவது சர்ச்சையை கிளப்பி கொண்டிருக்கிறது.

ஆதாரம் எங்கே
மதராஸி படத்துடன் கேபிஒய் பாலா தனது காந்தி கண்ணாடி படத்தை ரிலீஸ் செய்த நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தான் அதை செய்தார்களா என்கிற விவாதம் வெடித்தது. ஆனால், கேபிஒய் பாலா தனது படத்தை பிரபலப்படுத்தவே இப்படி செய்திருக்கலாம் என்கிற சர்ச்சைகளும் தற்போது கிளம்பி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், யாரோ ஒரு சிலர் வேண்டுமென்றே பாலாவுக்கு எதிராக களங்கம் விளைவிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பாலா நேரில் வந்து ஆதாரத்துடன் விளக்கினால் அதுகுறித்து பேசத் தயார் என்று திரையரங்க உரிமையாளர் திருச்சி ஸ்ரீதர் கூறியிருப்பது அதற்கு மேல் பரபரப்பை கிளப்பி வருகின்றன.
லாபத்தில் பங்கு
இப்படிப்பட்ட சூழலில், cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, மதராஸி படம் இந்தியா + ஓவர்சீஸ் சேர்த்து, 5 நாளில் 70 கோடி வசூல் செய்துள்ளது.. இதற்கு சிவகார்த்திகேயனுக்கு பாராட்டும், விமர்சனமும் என இரண்டுமே கிடைத்துள்ளது.. காரணம், இந்த படத்துக்காக வெறும் அட்வான்ஸ் மட்டும் வாங்கிக்கொண்ட சிவகார்த்திகேயன், படத்தின் லாபத்தில் ஒரு பங்கை எடுத்து கொள்வதாக கூறியிருந்தாராம்..
சிவகார்த்திகேயனின் சம்பளமே 70 கோடி.. இந்த படம் மொத்தமே 70 கோடிதான் இதுவரை வந்துள்ளது.. இதில் எங்கிருந்து லாபம் தருவது? என்கிறார்கள்.. மற்றொருபக்கம், தன்னுடைய படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக, ஆக்ஷன் ஹீரோ என்ற இடத்தை தக்க வைக்க வேண்டும், முருகதாஸுக்கும் இப்படம் பெயர் சொல்ல வேண்டும் என்பதற்காக சம்பளத்துக்காக அடம்பிடிக்காமல் விட்டுக்கொடுத்துள்ளது பாராட்டை பெற்று வருகிறது..
மதராஸி - காந்தி கண்ணாடி
இதற்கு நடுவில் கேபிஒய் பாலா எல்லாருக்கும் ஓடோடி சென்று உதவி வருகிறார்.. காந்தி கண்ணாடி என்ற படத்தை வைத்துக் கொண்டு ஏன் இப்படி செய்கிறார்? என்று தெரியவில்லை..
தங்களுடைய படத்தின் கண்டெண்ட் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.. நாமளே வலிய சென்று 100 வயதானவர்களை
படம் பார்க்க வைத்து, அவர்களை ஓவென்று அழ வைத்து, பிறகு தன்னுடைய போஸ்டரை கிழிக்கிறாங்க, பேனரை கிழிக்கிறாங்க என்று புலம்புகிறார்.. அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது..
ரப்பர் பந்து வெற்றி
ரப்பர் பந்து என்ற படத்துக்கு, பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ ஷோ போட்டு காட்டுவதற்கு கூட அவர்களிடம் அப்போது பணம் கிடையாது.. ஒரு ஷோவுக்கு 18 ஆயிரம் கட்ட வேண்டும்.. இதையே கட்ட முடியாமல் 2 தவணைகளாக கட்டியிருந்தனர்.. பிறகு அந்த படத்துக்கு எந்த பிரமோஷனும் இல்லை.. கேபிஒய் பாலா போல முன்னின்று சொல்வதற்கு ஆட்கள் யாருமில்லை.. ஆனால், ரப்பர் பந்து ஹிட்டானதை நாம் அனைவருமே பார்த்தோம்..
அப்படியிருக்கும்போது காந்தி கண்ணாடி படத்துக்கு ஒட்டுமொத்தமாக எதிர்வினையாற்றுவது சிவகார்த்திகேயன் தரப்பினர்தான் என்பது சரியானதா? அல்லது இப்படியெல்லாம் புலம்பி தன்னுடைய படத்தின் மீது அனுதாபத்தை தேடி கொள்ள முயல்கிறாரா? தெரியவில்லை.
கேபிஒய் பாலா
சேனல்களில் சினிமா விமர்சனம் என்பது வேறு, மக்கள் முடிவு செய்து என்பது வேறு.. உண்மையிலேயே காந்தி கண்ணாடி சிறந்த படம் என்றால், அதை தானாகவே மக்கள் பேசுவார்கள்.. இத்தனைக்கும் மீடியம் பட்ஜெட்டில் எடுத்து, நன்றாகவே காந்தி கண்ணாடி கலெக்ஷன் செய்யப்பட்டுள்ளது.. அப்படியிருந்தும் ஏன் புலம்புகிறார்கள் என்று தெரியவில்லை என்றெல்லாம் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications