இயற்கைக்கு மாறான.. ஷார்ஜாவிலும் ஒரு ரிதன்யா.. "நாய் மாதிரி நடத்தறான்ப்பா".. இதுக்கு தீர்வுதான் என்ன?
சென்னை: ரிதன்யாவின் இழப்பிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு அப்பாவி பெண், ஷார்ஜாவில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.. இது தொடர்பாக கணவர், மாமனார், நாத்தனார் என 3 பேர் கைதாகி உள்ளனர்.. அவர்களிடம் விசாரணையும் நடக்கிறது. எனினும், தற்கொலை செய்து கொண்ட பெண் எழுதி வைத்திருக்கும் கடிதம், கேரள காவல்துறையை நிலைகுலைய வைத்து வருகிறது.. ரிதன்யாவும் இதே போன்ற டார்ச்சரை அனுபவித்தால், தமிழக மக்களும், ஷார்ஜா கொலையை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.. இளம் பெண்களின் உயிரை காவு வாங்கும் வரதட்சணை தொல்லைக்கு என்னதான் தீர்வு?
கொல்லத்தைச் சேர்ந்த விபன்சிகா மணி என்ற பெண்ணுக்கு 33 வயதாகிறது.. அப்பா இல்லாத மகளை, செல்லமாக வளர்த்தால் அவரது அம்மா.. கிலோ கணக்கில் நகைகளை, பணத்தை கொட்டி, நிதிஷ் என்பவருக்கு திருமணத்தை வைத்து வைத்தனர்.

ஷார்ஜாவில் வேலை பார்த்து வரும் நிதிஷூடன், அவரது அப்பா, தங்கையும் உடனிருக்கிறார்கள்.. இவர்களுடன் திருமணமான புதுமணப்பெண் விபன்சிகாவும் இணைந்து ஒரே வீட்டில் வசித்துள்ளனர். விபன்சிகாவுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது.
படித்த பெண் - பட்டதாரி
ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியிலுள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில்தான் அனைவரும் குடியிருந்துள்ளனர்.. துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பதிவு எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார்..
சம்பவத்தன்று குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் விபன்சிகா. கணவர், மாமியார், நாத்தனார் கைது செய்யப்பட்டு விசாரணையின் பிடியில் உள்ளனர்.. "வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் போலீசாரின் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறப்பதற்கு முன்பு விபன்சிகா எழுதியிருந்த கடிதத்தில், "உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன். அனைத்து சித்ரவதையையும் அமைதியாகச் சகித்துக் கொண்டேன். ஆனால், அவர்களுக்கு இந்த திருமணம் போதுமானதாக இல்லை, வரதட்சணை போதுமானதாக இல்லை, கல்யாணத்திற்கு ஒரு கார் கூட தரவில்லை என்கிறார்கள்.
வரதட்சணை பேய்கள்
அவர்கள் என்னை வீடற்றவர், நலிந்தவர், நான் பணத்திற்காக பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.. அவர்களிடம் போதுமான பணம் இருந்தபோதிலும், அவர்கள் என்னுடைய சம்பளத்திற்காக என்னை துன்புறுத்தினார்கள்..
என்னை "நாய் போல அடித்தார்கள்". என்னுடைய கணவர் ஆபாசத்தால் ஈர்க்கப்பட்டவர்.. என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். நான் 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது எனக்கு சாப்பாடு கூட தராமல், வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.
என்னுடைய மாமனார் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.. இதை என் கணவரிடம் முறையிட்டதற்கு, "நான் உன்னை எனக்காக மட்டுமல்ல, என் தந்தைக்காகவும் திருமணம் செய்து கொண்டேன்" என்கிறார்... என்னுடைய கணவர், மாமனார், நாத்தனார், இந்த 3 பேரையும் மட்டும் தயவுசெய்து விட்டுடாதீங்க" என்று கண்ணீருடன் விபன்சிகா கேட்டுக் கொண்டுள்ளார்..
சிகப்பு - கருப்பு
விபன்சிகா அம்மா அளித்த புகாரில், "என் பொண்ணு அழகா இருப்பாள், சிகப்பாக இருப்பாள், நல்ல நீளமான தலைமுடி.. ஆனால், தாங்கள் கருப்பாக உள்ளதால் , என் மகளை அடித்து துன்புறுத்தி, அவளது தலையை மொட்டை அடித்துள்ளனர்.. வெள்ளை உடம்பு கருப்பாக மாற, ஓயாமல் அடித்துகாயப்படுத்தியிருக்கிறார்கள். இது தற்கொலை அல்ல, கொலை என சந்தேகப்படுகிறேன்" என குற்றஞ்சாட்டி உள்ளார்..
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள காவல்துறையினரும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.. ரிதன்யாவும் இதே போன்ற வரதட்சணை கொடுமையைதான் இங்கு அனுபவித்தார்... கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மாமனார், மாமியார் தன்னை மனரீதியாகவும் துன்புறுத்தினார் என்றார்.. இதையேதான் விபன்சிகாவும் கூறியிருக்கிறார்.
அப்படியே ரிதன்யா
கணவர் தன்னை நாய் மாதிரி நடத்தியதாக ரிதன்யா சொன்னதையே, இப்போது விபன்சிகாவும் கூறியிருக்கிறார்.. யார் யார் குற்றவாளிகள் என்பதை ஆடியோவில் ரிதன்யா பதிவு செய்ததுபோலவே, விபன்சிகாவும் கடிதம் மூலம் பதிவு செய்துள்ளார்..
இவ்வளவு கஷ்டத்தையும் விபன்சிகா, தன்னுடைய அம்மாவிடம் சொன்னாரா? சொல்லவில்லையா? அப்படி சொல்லியும், ரிதன்யா பெற்றோரை போல, அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்து கொள் என்று சொன்னாரா? தெரியவில்லை.
நாய் போல நடத்துறான்..ப்பா
சமீபத்தில் Thamizh Alai என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த வழக்கறிஞர் சுமதி, ரிதன்யா விவகாரம் குறித்து ஒரு பேட்டி தந்திருந்தார்.. அவர் சொன்ன சாராம்சத்தின் சுருக்கத்தை இங்கே மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
"அன்பும், காதலும் இல்லாத இடத்தில், வியாபாரமும், பணமும் நகையும் பெரிதாக கருதும் இடத்தில், கணவன் வாழ லாயக்கில்லாதவன் என்று முடிவெடுக்க ஏன் பெரியவர்களுக்கு தோன்றுவதில்லை?
'நாய் மாதிரி என்னை நடத்தறான்..ப்பா' என்று கணவனை பற்றி சொல்கிறார் என்றால், கீழ்த்தரமாக நடத்துவது என்பது அதன் அர்த்தம் கிடையாது.. இதன் அர்த்தத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால்தான், அந்த பெண், மறைமுகமாக அதை சொல்லியிருக்கிறார்.
அப்பாவி பெண்கள்
இன்றைய சூழலில், கணவனைவிட்டு ஒரு பெண் பிரிந்து விடுகிறார் என்றாலே, அப்பெண் மீதான பார்வையே மாறிவிடுகிறது.. கணவன் குடும்பத்தை விட்டு வெளியே வந்தால், அந்த பெண் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை எடைபோட்டு, இதுக்கு பேசாமல் கணவன்கூடயே அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்து கொள் என்று பெற்றோர்கள் சொல்கிறார்கள். இதுதான் தவறான விஷயம்..
கணவனை பிரிந்து வெளியில் பல பிரச்சனை இருக்கலாம். அதுக்காக கணவனிடமே நம் பெண்ணை மீண்டும் தள்ளிவிடக்கூடாது என்ற புரிதலைத்தான் பெற்றோர்களுக்கு ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
திருமணமே வேணாம்
வியாபாரமாக திருமணம் நடக்கிறது. யாராக இருந்தாலும், இப்படி பணம் கொடுத்து திருமணம் செய்யாதீங்க.. பணம் தந்தால்தான் உன் மகளுடன் வாழ்வேன் என்று ஒருத்தன் சொன்னால், அவனிடம் பெண்ணை அனுப்பாதீங்க.. ஆடம்பரமான திருமணத்தை செய்தால்தான் மரியாதை கிடைக்கும் என்பதை நம்பாதீங்க..
அன்பின் மீதான திருமணம் மட்டுமே நிலைக்குமே தவிர, பொருளின்பால் பட்ட திருமணம் என்றும் நிலைக்காது.. இப்படியெல்லாம் செய்தால்தான் மகளுக்கு திருமணம் நடக்கும் என்றால், அப்படிப்பட்ட திருமணமே நம்முடைய பெண்களுக்கு தேவையில்லை, நம்ம வீட்டில், அந்த பெண்கள் எப்போதும்போலவே சந்தோஷமாக இருக்கட்டும் என்ற தெளிவு பெற்றோர்களுக்கு வரவேண்டும்" என்று கூறியிருந்தார்..
சுமதி சொன்ன இந்த கருத்தை, உயிரிழந்த விபன்சிகா விஷயத்திலும் பொருத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.
ரிதன்யாவின் இழப்பிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு அப்பாவி பெண், ஷார்ஜாவில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.. இது தொடர்பாக கணவர், மாமனார், நாத்தனார் என 3 பேர் கைதாகி உள்ளனர்.. அவர்களிடம் விசாரணையும் நடக்கிறது. எனினும், தற்கொலை செய்து கொண்ட பெண் எழுதி வைத்திருக்கும் கடிதம், கேரள காவல்துறையை நிலைகுலைய வைத்து வருகிறது.. ரிதன்யாவும் இதே போன்ற டார்ச்சரை அனுபவித்தால், தமிழக மக்களும், அதிர்ச்சியில் உள்ளனர்












Click it and Unblock the Notifications