Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசி வரை நிறைவேறாத ஹூசைனியின் ஆசை.. அத்தனை முறை கேட்டாரே? நிஜவீரர் "புன்னகை மன்னன்" ஹுசைனி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹூசைனி துளியும் மரணத்துக்கு தயக்கம் காட்டாதவர்.. கடைசிவரை தன்னுடைய மனநிலைமையை சந்தோஷமாக வைத்திருந்தவர்.. அதனால், மரணத்தையே வென்றவராகிவிட்டார்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஹூசைனிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, எத்தனையோ பிரபலங்களுக்கு பாதுகாப்பை வழங்கிய ஹூசைனிக்கு அஞ்சலி செலுத்த, பிரபலங்கள் யாருமே போகாதது குறித்தும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்

Media circle யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஹூசைனியை பொறுத்தவரை நல்ல வீரன்.. ரத்த புற்றுநோய் இருந்துள்ளது, 25 நாட்களுக்கு முன்புதான் தெரியவந்துள்ளது.. இது கடுமையான புற்றுநோய்.. தினமும் 2 பாட்டில் ரத்தம் ஏற்றிக் கொண்டேயிருக்க வேண்டும் அல்லது எலும்பு மஜ்ஜையை எடுத்து டிரான்ஸ்பிளான்டேஷன் செய்யணும் என்றெல்லாம் சொன்னார்கள்..

Shihan Hussain vijay

ஆனால், இதனை 40 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்குதான் செய்ய முடியுமாம். அதனால்தான் 60 வயதுக்கு மேற்பட்ட ஹூசைனிக்கு செய்ய முடியாமல் போயிற்று. எனவே, சிகிச்சை மட்டுமே நடந்து வந்துள்ளது..

கடைசிவரை சோகம் இல்லை

ஆனாலும் ஆயுள் குறைவு என்பதை மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். எனினும், அதை பற்றி ஹூசைனி கவலைப்படவேயில்லை..
மருத்துவமனையில் இருந்துட்டே, பல வீடியோ போட ஆரம்பித்துவிட்டார். பல விஷயங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.. அந்த பேட்டிகள் எதிலுமே மரணத்தை பார்த்து அவர் பயந்த மாதிரியே தெரியவில்லை.. சோகமாகவும் இல்லை.. ஜாலியாகவே இருந்தார்..

வாழ்நாள் எண்ணப்படுகிறது என்று தெரிந்தாலே, பலரும் மனரீதியாக டவுன் ஆகிவிடுவார்கள்.. மரணத்துக்கு அருகில் இருந்து கொண்டு எப்படி சிரித்து உங்களால் பேச முடிகிறது என்று ஒரு நெறியாளர் கேட்டதற்கு, "அதென்ன மரணம்? எல்லாருக்கும்தானே வரப்போகுது, நான் பயப்பட மாட்டேன்" என்று கூறியிருந்தார். ஹூசைனி என்பவர் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்..

கராத்தேவில் பல சாதனைகளை படைத்தவர்.. கராத்தே, வில்வித்தையை கல்லூரி மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் கராத்தேவுக்காக தன்னுடைய வாழ்க்கையே தியாகம் செய்துள்ளார். தன்னுடைய கராத்தே மாணவரை எப்படியாவது ஒலிம்பிக்கில் விருது வாங்க வைக்க வேண்டும் என்பது ஹூசைனியின் கனவாக இருந்தது.. இது ஒரு ஆசிரியருக்கான பண்பு.

புன்னகை மன்னன் வாய்ப்பு

சினிமா உலகிலும் தொடர்பு உடையவர் ஹூசைனி.. பல படங்களிலும் நடித்திருக்கிறார்.. முதன்முதலில் நடித்தது புன்னகை மன்னன் படத்தில்தான்.. ஹை புரபைல் என்ற செக்யூரிட்டி சர்வீஸ் வைத்திருந்தார் ஹூசைனி. சினிமாவிலுள்ள முக்கிய பிரமுகர்கள், அதாவது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சங்கர், ஏஆர் ரஹ்மான், எஸ்பிபி, பாரதிராஜா, பாலச்சந்தர் என இன்னும் ஏராளமான முக்கிய பிரபலங்களுக்கு பாதுகாப்பு தந்தார்.. அப்படித்தான் பாலச்சந்தர் புன்னகை படத்தில் அவருக்கு வாய்ப்பு தந்தார்.

இப்போது பவுன்சர்கள் என்று சொல்வதுபோல, ஹூசைனி அப்போது செக்யூரிட்டியாக இருந்து பாதுகாப்பு தந்தார்.. கமலுக்கு விஸ்வரூபம் படத்தில் அச்சுறுத்தல் நேரத்தில் துணையாக இருந்தார்.

திருட்டு விசிடி ஒழிக்க பாடுபட்ட தனிநபர்

திருட்டு விசிடியை தமிழ்நாட்டில் ஒழிப்பதில், பாடுபட்டார். பர்மா பஜாரில், தனிநபராக சென்று ரைடுகளை நடத்தி வந்தார்.. யாருக்கும் பயப்படாமல், நேர்மையாக இருந்தார். பத்ரி படத்தில் விஜய்க்கு கராத்தே பயிற்சி தந்தது ஹூசைனிதான். அதனால்தான். மருத்துவமனையில் இருந்தபோது, விஜய்யை சந்திக்கணும் என்று ஆசைப்பட்டார்.

இந்த தகவல் விஜய்க்கு போனதா தெரியவில்லை. கண்டிப்பாக கட்சி தலைவர் என்பதால், பல விஷயங்கள் அவருக்கு போயிருக்கும். ஆனால், ஒருமுறை வந்து ஹூசைனியை விஜய் பார்த்திருக்கலாம்.

ஜெயலலிதாவின் அன்பு அறிவுரை

56 விதமான ஜெயலலிதா அம்மையாரின் ஓவியங்களை வரைந்தார்.. தன்னுடைய ரத்தத்தாலேயே சிலை செய்தார்.. தன்னைதானே சிலுவையில் அறைய சொல்லி, காலிலும், கைகளிலும், 6 இன்ச் ஆணியால் அடிக்க சொன்னார். இதையெல்லாம் கேள்விப்பட்ட ஜெயலலிதா, அவரை அழைத்து பேசினார். இனிமேல் இதுபோல உடம்பை வருத்திக் கொண்டு, இப்படி செய்ய வேண்டாம், அன்பை வேறு விதமாக காட்டுங்கள் என்று அன்புடன் அறிவுறுத்தியிருக்கிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹூசைனி சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது, துணை முதல்வர் உதயநிதி, யாருக்கும் தெரியாமல், 5 லட்சம் உதவி செய்துள்ளார். அதற்கு ஹூசைனியும் நன்றி சொல்லி இருந்தார். இப்போது ஹூசைனி மறைவுக்கு பிரபலங்கள் போனதாக தெரியவில்லை.. ஏன் சினிமா உலகில் இப்படி இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை..

ஹூசைனியின் கடைசி ஆசை

ஆனால், 3 விதமான ஆசைகளை வைத்திருந்தார் ஹூசைனி.. முதலாவதாக, பெசன்ட் நகர் ஜானகி எம்ஜிஆர் காலேஜ் அருகில் தன்னுடைய பயிற்சி மையத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், நடுவில் சாலை வர உள்ளதாக தெரிகிறது.. அதை தடுக்க முயற்சி மேற்கொண்டிருந்தார்.. அது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்..

தன்னுடைய வீட்டை பவன் கல்யாண் வாங்கி, அதை பயிற்சி கூடமாக மாற்றி, அதில் தன்னுடைய விருதுகள், பதக்கங்களை வைத்து பாதுகாக்க வேண்டும் என்று பவன் கல்யாணுக்கே கோரிக்கை வைத்திருந்தார்.. அடுத்ததாக, விஜய்யை நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. இந்த மூன்று ஆசையுமே ஹூசைனிக்கு நிறைவேறவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+