Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குப்பை குழப்ப சீரியல்களுக்கு மத்தியில் ஒரு பரவசம்.. ஷீரடி சாய்பாபா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வருது ஷீரடி சாய் பாபா சீரியல். ஷீரடி மக்களோடு மக்களாக சாய் எப்படி வாழ்ந்தார்னுதான் கதை நகருது.

இதுவரை பார்த்ததில் அன்றாட நிகழ்வுகள், சாய் சொன்னால் மக்கள் அதை கேட்பது...ஆனால், சாய் ஏழை என்பதால் பணக்காரர்களிடம் வேலை செய்யும் கூலி ஆட்கள், சாயை நெருங்காமல் பயந்து இருப்பது... இப்படித்தான் அவரின் அன்றாட வாழ்வு ஆரம்பத்தில் இருந்திருக்கு.

அன்றாடம் சாய் ராமர் மீதும் ,அனுமன் மீதும் பக்தி பாடல் பாடுவது, குழந்தைகளுக்கு பக்தியை சொல்லித்தருவது, நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லித் தந்து கெட்டவைகளை செய்யகூடாது என்று எடுத்து சொல்வது இப்படி இருக்கிறது. சாயின் அன்றாட உணவும் பிச்சை எடுத்துதான்.

திருமணத்துக்குதானா

திருமணத்துக்குதானா

பெண் என்றாலே அவள் சிறு வயதில் இருந்தே வீட்டு வேலைகளை கற்றுக்கொள்ள வேண்டும், புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் பெருமையை காக்க நல்ல மருமகளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மட்டுமே பெற்றோரால் சொல்லி வளர்க்கப்படுபவள் சம்பா.

சம்பா

சம்பா

சம்பா 12, 13 வயது சிறுமிதான்.ஆனால், அவளை எப்போதும் அவளது அம்மா, வீட்டில் அந்த வேலையை செய், இந்த வேலையை செய்னு அதட்டிகிட்டே இருக்காங்க. இதனால, சம்பாவுக்கு கோபம் வருது. அம்மாவிடம் எதிர்த்து பேச, சாயைப் பார்க்க கூப்பிடுகிறாள் தோழி.

இனி பாடவும்

இனி பாடவும்

சாயை பார்க்கவும் கூடாது, இனி பக்தி பாடல்கள் பாடவும் கூடாது. நீ சாயைப் பார்க்க போனாலும் வீட்டுல உங்க அம்மாவுக்கு உதவி செய்யற..ராட்டி தட்டற. ஆனா, சம்பா ஒண்ணும் செய்யறதில்லை. வீட்டில் வந்தாலும் பாட்டு பாடிகிட்டுத்தான் இருக்கான்னு சொல்றாங்க சம்பா அம்மா.

கண்டிப்பா

கண்டிப்பா

அம்மா இன்னிக்கு மட்டும் அனுமதிங்க.. போயிட்டு வந்து சம்பா இந்த வேலைகளை செய்வான்னு கெஞ்சறா தோழி. அப்பாவும் வந்துவிட, அப்பா சம்பாவுக்கு அனுமதி கொடுக்கறார்.

இருக்க கூடாதா?

இருக்க கூடாதா?

சாயிடம் நடந்தவைகளை சொல்கிறாள் சம்பாவின் தோழி. சம்பாவும், சாய் நான் சுதந்திரமா இருக்க கூடாதா, எப்போதும் வீட்டு வேலைதான் செய்யணுமா.. என்னை படிக்கவும் வைக்கலை.. அப்டீன்னா கல்யாணம் செய்துகிட்டு போயி புருஷன் வீட்டுல வேலை செய்யறதுதான் என் பிழைப்பான்னு கேட்டு அழறா சம்பா.

எதில் விருப்பம்?

எதில் விருப்பம்?

சம்பா அழக்கூடாது.. பெண்கள் சுதந்திரமாத்தான் இருக்கணும், அதுக்கு முதலில் தைரியம் வேணும். உனக்கு எதில் விருப்பம்னு சொல்லு..அதை செய்யலாம் சம்பான்னு சொல்றாங்க சாய் எனக்கு பாடுவதில் விருப்பம் அதிகம் சாய்..தினமும் நான் பாட வேண்டும் என்று சொல்கிறாள் சம்பா

எடு சம்பா

எடு சம்பா

நீ பயிற்சி எடு சம்பா நேரம் வரும்போது, அதை வச்சு நீ சொந்த காலில் நிற்கலாம்னு சாய் சொல்றார். இதுக்கு நடுவுல ஷீரடிக்கு வந்திருந்த நாடக குழுவுக்கு ஒரு நாள் உடைகள் திருட்டு போய்விட, இரவு நடக்க வேண்டிய நாடகத்துக்கு சாய் சொல்லைக்கேட்டு ஊர் மக்களே உடைகள் தைத்து தருகின்றனர்.இது போன்ற உதவிகள் மட்டுமே இதுவரை செய்து வந்த சாய் இப்போது அற்புதமும் நிகழ்த்த ஆரம்பித்து இருக்கார்.

சம்பாவுக்கு

சம்பாவுக்கு

நாடக குழுவில் பெண் வேஷம் போட்ட ஒருவன், குடி, போதை மருந்து என்ற பழக்கத்தில் இருந்தது பிடிக்காமல் நாடக குழு நடத்தறவர் அவனை வேலையை விட்டு தூக்கி விடறார்.இதனால் முதலாளி மீது கோபத்தில் இருக்கிறான் நடிகன். நடிக்க ஆளே கிடைக்காத நேரத்தில் சம்பாவை முன்பே அறிந்திருந்த முதலாளி, சம்பாவை ராணி வேடத்தில் நடிக்க அழைக்கிறார்.

பெற்றோர் சம்மதம்

பெற்றோர் சம்மதம்

சாய் சம்பா நடிக்கட்டுமே.. அவளுக்குத்தான் அதில் நல்ல புலமை இருக்கிறதே என்று கூற பெற்றோர்களும் சம்மதிக்கின்றனர். முதன்முதலாக பெண் வேடத்தில் பெண்ணே நடிப்பது சம்பாதான் என்று புகழாரம் சூட்டுகிறார் முதலாளி.

இங்கும்

இங்கும்

தனக்கு பதிலாக சம்பா நடிப்பதை அறிந்து கோபம் கொள்கிறான் எப்போதும் பெண் வேடமிட்டு நடிப்பவன். எப்படியாவது அவளை நடிக்க வைக்க கூடாதுன்னு சம்பாவின் பெற்றோரிடம் ஆட்களை அழைத்துச் சென்று மிரட்டுகிறான். அவர்களும் பயந்து, சரி சம்பா நடிக்கும்போது, அவளை நடிக்க விடாமல் தடுத்து விடுகிறோம். சம்பாவுக்கு பல்லின்னா பயம். அதை வச்சு பயமுறுத்தறோம்னு சொல்றாங்க.

பல்லி

பல்லி

சம்பா ராணி வேடமிட்டு நடிக்க ஆரம்பிக்க, எல்லோரும் கைதட்டுகிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒரு மரத்தில் பல்லியை ஒட்ட வைத்து விடுகிறார்கள், மிரட்டிய பயத்தில் சம்பாவின் அம்மா அப்பா.

சாய் ஒளி

சாய் ஒளி

பல்லியை பார்த்த சம்பா பயத்தில் நடிப்பதை மறந்து நின்றுவிடுகிறாள், சம்பாவின் நண்பர்கள், தோழிகள் நல்லாத்தானே நடிச்சுக்கிட்டு இருந்தா, ஒத்திகையில் கூட நல்லா நடிச்சாளே..சம்பாவுக்கு இப்போ என்னாச்சுன்னு குழம்புறாங்க.

அகினி குண்டத்தில்

அகினி குண்டத்தில்

சம்பா முன் ஒளி வந்து பிரசன்னமாகிறார். சம்பா, தைரியமாக இருக்க வேண்டும், சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என்று நான் உனக்கு சொல்லி இருக்கிறேன் அல்லாவான்னு கேட்கறார். சம்பா முகம் மகிழ்வில் மாறுகிறது.

இப்படி ஷீரடி சாய் பாபாவின் அற்புதங்களை இப்போது சீரியலில் காண்பிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சாய் பக்தர்களுக்கு தினமும் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+