நான் பண்ணுன அந்த தப்பு.. மூன்று மாசம் பட்ட கஷ்டம்.. அந்த பிரச்சனையை கையாள முடியல! ஷிவானி வருத்தம்
சென்னை: சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்தார். அதுபோல சோஷியல் மீடியாவிலும் பலருக்கும் தெரிந்தவர் தான். இந்த நிலையில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் நடந்து கொண்ட விதம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
சீரியல்களில் அறிமுகமாகி தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷிவானி சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்துவருகிறார். தன்னை பிரபலப்படுத்திய இன்ஸ்டாகிராமை மறந்துவிடாமல் இவர் அடிக்கடி அதில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருவது இவருடைய வழக்கமாக இருந்து வருகிறது. இவர் செய்யவில்லை என்றாலும் இவருடைய ரசிகர்கள் விடுவதில்லை.

நான்கு மணி ஷிவானி
ஒரு காலத்தில் நான்கு மணி ஷிவானி என்று ரசிகர்கள் படடம் கொடுக்கிற மாதிரி எப்போதுமே போஸ்ட் போட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருந்தார். அதுவும் சமூக வலைத்தளத்தில் இவருடைய ரெக்கார்டை முடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது அது எல்லாம் எங்க தலைவி கிட்ட நடக்காது என்று இவருடைய ரசிகர்கள் சிலாகித்து வந்தனர். ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் தங்களுடைய கடமையை தவறாமல் செய்வோம் என்று ரசிகர்கள் பலர் இவருக்கு கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர்.
துடிக்கும் லைக் பட்டன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக அளவில் இவர் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இல்லை என்றாலும் வரும்போது ரசிகர்களின் மனதில் பதிகின்ற மாதிரி தான் போட்டோக்களை பதிவிட்டு விடுகிறார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஷிவானி முழுமையாக சின்னத்திறையில் இருந்து விலகி இருந்தார். இப்போது சினிமா மற்றும் சீரியல் என்று எதிலும் அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை. அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

ஷிவானி வருத்தம்
அதில் அவர் பேசும்போது, எனக்கு இப்போ கொஞ்சம் நாட்களாகவே இழப்பு குறித்து ரொம்ப பயமா இருக்கிறது. கொஞ்ச நாள் முன்னாடி தான் என்னுடைய தாத்தா, பாட்டி இறந்து போனார்கள். அது என்னை ரொம்பவும் பாதித்துவிட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் என்னால் அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. அதற்காகத்தான் நான் பிரேக் எடுத்து இருந்தேன்.

இப்போதான் புரியுது
இந்த வாழ்க்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். சில விஷயங்களை நான் இன்னும் கொஞ்சம் புரிதலோடு கையாண்டு இருக்கலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் சொல்லி ஆக வேண்டும் காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாங்கள் வருவதற்கு முன்பு பலர் அந்த வாய்ப்புக்காக காத்திருந்தார்கள். ஆனால் எனக்கு 18 வயது இருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
புது முயற்சி
ஆனால் அப்போது நான் பயந்துவிட்டேன் அதனால் போகவில்லை. பிறகு அடுத்த வருடமும் என்னை கூப்பிட்ட போது நாம முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று தோன்றியது. அதனால் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றேன். ஆனால் அங்கு உள்ள சூழ்நிலையை எனக்கு சரியாக கையாள தெரியவில்லை.

பிக் பாஸில் ஏற்பட்ட கஷ்டம்
என்னுடைய வாழ்க்கையில் எனக்கு எல்லாமாக இருப்பவர் என்னுடைய அம்மா தான். அவரைப் பிரிந்து நான் தனியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது அங்கிருந்து விஷயங்கள் மற்றும் நபர்களிடம் எப்படி பேச வேண்டும் பழக வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நான் வெளியே வந்த பிறகு எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
ரசிகர்களின் சப்போர்ட்
அதிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சிங்க பெண்ணே டாஸ்க்கில் நான் விளையாடியது பற்றி பலர் என்னிடம் பெருமையாக பேசினார்கள். நான் அந்த நிகழ்ச்சியில் மூன்று மாதங்கள் இருந்தேன். வெளியே வந்த பிறகு உள்ள சூழ்நிலையை கையாள்வதற்கு கொஞ்சம் நாட்கள் பிடித்தது. ஆனால் என்னுடைய அம்மாவிற்கு நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நடந்து கொண்ட விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. அதுபோல பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பிறகு ரசிகர்கள் எனக்கு நல்ல சப்போர்ட் பண்ணுனாங்க. பிறகு தான் வாழ்க்கை நார்மல் ஆனது என ஷிவானி நாராயணன் பேசி இருக்கிறார்.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: கோமதி நறுக்குன்னு கேட்ட கேள்வி! ஆடி போன பாண்டியன்.. உடையும் குடும்பம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications