ஜில்லுன்னு ஷிவானி.. அந்தக் கல்லாக நான் இருந்திருக்கக் கூடாதா.. அலை பாயும் ரசிகர்கள்!
சென்னை : போட்டிருக்கும் ஆடை மட்டும் வெள்ளையில்லை உள்ளிருக்கும் மனதும் வெள்ளைதான் என வெள்ளை ஹாட்டினை பறக்கவிட்டு ஷிவானி மாஸ் காட்டியிருக்கிறார்
வேற எங்கேயும் நாங்க பார்க்கல. அந்த சிரிப்பை தவிர என வாண்டடாகவே வந்து சில ரசிகர்கள் சிக்கியிருக்கிறார்கள்.
சிரிக்கும் சிரிப்பில் சில்லறைய உதிர்கிறதா என்று சிலர் ஓடோடி வருகிறார்களாம். சம்யுக்தாவே ஓடி வந்து க்யூட்டின்னு கொஞ்சிருக்காங்கன்னா பார்த்துக்கங்க.

தெருவோரத்தில் தேவதையாய்
டைட் ஜீன்ஸில் கெத்தாக தெருவோரத்தில் அமர்ந்து இருக்கும் ஷிவானியை அப்படியே புகைப்படம் எடுத்து இருக்கும் போட்டோகிராஃபர் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று ரசிகர்கள் எல்லாம் பொறாமைப்படுகின்றனர். அந்த அழகான சிரிப்பினை சிந்த விடாமல் போட்டோ எடுத்திருக்கிறார். மாடலாக இருந்தாலும் சரி டிரடிஷனல் உடையாக இருந்தாலும் சரி எனக்கு நிகர் நான்தான் என கலக்கிக் கொண்டிருக்கும் ஷிவானி இப்போ மெல்லிய வெள்ளை நிற உடையில் சொக்க வைத்திருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் யாருமே முகத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையா என்று அவர்களுக்கும் அவர்களுடைய போனுக்கும் மட்டும்தான் தெரியும் என்று நெட்டிசன்களும் பதில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

பீல் பண்ணும் ரசிகர்களுக்கு தரிசனம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரொம்பவே பிஸியாக மாறிப்போன ஷிவானி அதுவரைக்கும் செம ஆக்டிவாக இருந்த இன்ஸ்டாகிராமினை கொஞ்சம் கூட கண்டுக்கமாட்டுக்கார் என்று பலபேர் பீல் பண்ணி கொண்டு இருக்கும்போது நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என இப்போ நிரூபித்திருக்கிறார். தினமும் போஸ்ட் போட சொல்லி கேட்கும் ரசிகர்களுக்கு தான் அடிக்கடி வரவில்லை என்றாலும் வரும்போது மனசுல நிக்கிற மாதிரி தாக்கத்தை ஏற்படுத்திட்டு போயிட்டு தான் இருப்பேன் என்பதை சொல்லாமல் செய்து காட்டியிருக்கிறார்.

திறமைக்கு வயது தடையில்லை
பள்ளி செல்லும் வயதில் சின்னத்திரை கதாநாயகியாக மாறிய ஷிவானிக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது என்னவோ இன்ஸ்டாகிராமில் தான். இவருடைய அழகான போட்டோ சூட்டை பார்த்த சீரியல் டீம் இவரை வான்டட்டாக ஆடிஷனில் சென்னையில் கலந்து கொள்ள சொல்லியிருக்கின்றனர். முதலில் இரு நாட்களுக்கு வரும் சும்மா யாரோ கலாய்க்கிறார்கள் என்று இருந்திருக்கிறார். பின்பு சரி ட்ரை பண்ணி பார்ப்போமே என்று கலந்து கொண்டதும் இவரே அதில் செலக்ட் ஆகி இருக்கிறார். முதல் முதலில் பகல் நிலவு சீரியல் பாவாடை தாவணியில் வந்து அனைவரின் மனதையும் அழைபாய வைத்துவிட்டார். இவருக்கு இந்த சீரியலின் கேரக்டர் நன்றாகவே செட் ஆனது பெரிய பிளஸ் தான். ஸ்கூல் படித்துக்கொண்டிருக்கும்போது இவர் நடிக்க வந்து இருந்தாலும் படிப்பிலும் கவனத்தை செலுத்தி கொண்டுதான் இருந்திருக்கிறார்.

சீரியலுக்கு டாட்டா காட்டிடாரே
தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் திடீரென்று சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் இவர் பிக்பாஸ்க்கு செல்லப் போகிறார் என்று கேள்விப்பட்டதுமே அவருடைய சமூக வலைத்தள ரசிகர்கள் எல்லாம் வேண்டாம் என்று கெஞ்சி வந்தனர். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அதற்கு பிறகு அவருக்கு ஆதரவு கொடுத்து அவருக்காக ஓட்டளித்தும் வந்தனர். ஒரு கட்டத்தில் இவர் பாலாஜியுடன் நட்பாக இருப்பது பிடிக்காததால் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி விட்டனர். அதனால் தான் இவரை கடைசி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்த பிறகாவது மீண்டும் போட்டோஷட் நடத்துவார் என்று ஆர்வமாக காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான்.

கேஷுவலான அழகுதான்
சமீபகாலமாக இவர் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவரை அதிகமானோர் முகத்தையும் உடல் அமைப்பையும் வைத்து கலாய்த்து விட்டனர். அதனால் வெளியே வந்த பிறகு வெறிகொண்டு உடற்பயிற்சி செய்து இப்போ சிக்கென்று மாறிவிட்டார். தான் உருமாறி இருக்கும் அழகை கேஷுவலாக காட்டுவதாக இப்போ ரோட்டோரத்தில் அமர்ந்திருந்து இவர் எடுத்த போட்டோக்களை பார்த்ததும் இவரை கிண்டல் பண்ணுன ரசிகர்கள் இப்போ வேற லெவல் தலைவி என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications