நாஸ்டால்ஜிக் மெமரீஸ்! சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய செய்தியை வாசித்த "தூர்தர்ஷன்" ஷோபனா ரவி
சென்னை: நிலவில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய தருணத்தை தனது அழகான தமிழ் உச்சரிப்பின் மூலம் ஷோபனா ரவி செய்தியாக வாசித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவே பெருமைப்படும் அளவுக்கும் உலக நாடுகள் வியக்கும் அளவுக்கும் வியத்தகு சாதனையை செய்துள்ளது இஸ்ரோ. ஆம்! யாருமே போகாத மிகவும் கடினமான நிலவின் தென் துருவத்தில் இந்தியா காலடி எடுத்து வைத்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் காலடி வைத்துள்ள முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றது. சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது. நேற்றைய தினம் சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரமும் ரோவர் பிரக்யானும் தரையிறங்கியது. ரோவர் பிரக்யான் நிலவில் இறங்கியது அங்கு ஒரு ரவுண்ட் வலம் வந்தது.
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடுகளும் கால் பதிக்காத நிலையில் இந்தியா முதல் நாடாக அங்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த 14 நாட்களும் 6 கால்களை கொண்ட பிரக்யான் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை செய்யும்.

இந்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானின் ஆயுட்காலம் ஒரு நிலவு நாள் ஆகும். அதாவது 14 நாட்கள். நிலவில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 5 கருவிகள் லேண்டரில் அனுப்பப்பட்டன. அது போல் ரோவரில் ஆல்பா எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் ரசாயன பொருட்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும்.
அது போல் தரையிறங்கும் இடத்தில் நிலவில் மண், பாறைகள் இருக்கின்றன என்பதையும் இது ஆய்வு செய்யும். லேண்டரில் ரம்பா எனும் கருவி அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் அயனிகள், எலக்ட்ரான்கள் எவ்வளவு இருக்கின்றன ,அதன் அடர்த்தி என்ன என்பதை அளவிடும். நிலவில் தென் பகுதி குளிர்ச்சியான பகுதி.
எனவே இங்கு வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறியும் கருவியும் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் படும் என்பதால் இந்த ஆராய்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய விஞ்ஞானத் துறையில் நல்லதொரு வளர்ச்சியை கொடுக்கும். இந்த சம்பவத்தை ஒவ்வொரு இந்தியரும் மார்தட்டி பெருமைப்படுகிறார்.
நிறைய பிரபலங்கள், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சந்திரயான் 3 குறித்த செய்திகளைத்தான் ஊடகங்களும் செய்தி சேனல்களும் ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் 1970 களில் பிரபலமான ஷோபனா ரவி இந்த சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய செய்தியை வாசித்தால் எப்படி இருக்கும் என பலர் கேட்டிருந்தனர்.
இதையடுத்து நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஷோபனா ரவி சந்திரயான் 3 செய்தியை வாசித்துள்ளார். இந்த வீடியோவை சன் செய்தி வாசிப்பாளர் ரத்னா சிவராமன் தனது சமூகவலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். இது குறித்து ரத்னா தனது பதிவில் நிலவில் இந்தியா.
இந்த சரித்திர நிகழ்வை Shobana Ravi செய்திகள் வாயிலாக உலகிற்கு சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று அவர்களின் ரசிகர்கள் பலர் social media வில் கேட்டிருந்தனர்..
இதோ படித்து விட்டார்!!!
நிறுத்தி நிதானமாய்... திருத்தமாய்
ஒவ்வொரு வார்த்தையையும் கேட்பதற்கு
எத்தனை ரம்மியமாக இருக்கிறது!!!
அவருடைய உடல் மொழி, குரலில் சரியான ஸ்ருதி, எங்கும் ஏற்றமோ இறக்கமோ இல்லை. கவனத்தை ஈர்க்கும் தந்திரங்கள் இல்லை. ஆழ்மனதில் இருந்து செய்தியை வாசித்துள்ளார் , இதை பார்த்து கற்றுக் கொள்ளுங்களேன் என ரத்னா தெரிவித்துள்ளார். ஷோபனா ரவி சென்னை தூர்தர்ஷனில் நீண்ட காலமாக செய்தி வாசித்தவர். அவருடைய தமிழ் உச்சரிப்பு, உடை உள்ளிட்டவைகளுக்கு ரசிகர்கள் அதிகம். பல ஆண்டுகள் கடந்தாலும் அதே உணர்வுகளை கண் முன் கொண்டு வருகிறார் ஷோபனா ரவி. இவரை ரோல்மாடல்களாக கொண்டு நிறைய பேர் இன்று செய்தி வாசிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications