சிறகடிக்க ஆசையில் சூடு பிடித்த கதை.. ரோகிணிக்கு வரப்போகுது பெரிய பிரச்சனை! முத்து வாழ்க்கையில் திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் அம்மா மயக்கம் போட்டு ரோட்டில் விழுந்திருக்கிறார். இதனால் கிரிஷ் தனியாக தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மிகப்பெரிய பிரச்சனை வரப்போகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய ஒவ்வொரு உண்மைகளையும் முத்துமீனா தான் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்ல என்று உண்மை கறிக்கடைக்காரர் மூலமாக முத்துவுக்கு தெரிய வந்து குடும்பத்தினரிடம் சொல்லி இருந்தனர். அதனால் விஜயா இப்போ வரைக்கும் ரோகிணியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

விஜயாவை சமாதானப்படுத்துவதற்காக ரோகிணி மீண்டும் மீண்டும் கடன் வாங்கி ஒவ்வொரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பழைய பிஏ ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். அது போதாது என்று சிட்டியும் அவ்வப்போது ரோகிணியை மிரட்டுகிறார். இந்த வரிசையில் இப்போது ஸ்ருதியின் அம்மாவும் ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் அணுகுண்டுக்கு பக்கத்தில் இருக்கும் ரோகிணிக்கு இப்போது புது பிரச்சனை வரப்போகிறது.
அதாவது ரோகிணிக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் உண்மை இப்பொழுது குடும்பத்திற்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் இனி அது தான் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரோகிணியின் மகன் கிரிஷை தத்தெடுக்க வேண்டும் என்று முத்துமீனா ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர். ஆனால் ரோகிணி மிரட்டியதால் அவருடைய அம்மா இதற்கு சம்மதிக்காமல் இருந்தால் இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் முத்து தன்னுடைய அப்பாவை ஸ்கூலில் விட்டு விட்டு காரில் வரும்போது தெருவில் ஒரு அம்மா விழுந்து கிடக்கிறார்.
அப்போது அங்கு ஒரு சிறுவன் அழுது கொண்டிருக்கிறார். சுற்றி கூட்டத்தினர் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து பார்க்கும் போது கிரிஷ் பாட்டி என்று தெரிகிறது. அக்கம் பக்கத்தினரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கும் போது ஒரு பைக்காரன் வேகமாக வந்தது, அப்போ அந்த பாட்டி அம்மா அவங்க பேரனை காப்பாத்திட்டு கீழ விழுந்துட்டாங்க, அதில் மூச்சுப்போச்சு இல்லாம இருக்காங்க என்று சொன்னதும் முத்து ரோகிணி அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போகிறார்.
அங்கு இருந்தவர்கள் எல்லோரும் இந்த அம்மா உயிரோடு இருக்கா? இல்லையா? என்று தெரியலையே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ரோகினியின் அம்மா இறந்து போய்விட்டார் க்ரிஷ் நிலைமை பரிதாபமாக இருக்கும். அதனால் கிரிஷ் உடைய அம்மா யார் என்று முத்துவும் மீனாவும் தேட தொடங்குவார்கள். ஏற்கனவே அந்த குழந்தை மனோஜின் குழந்தையாக இருக்குமோ என்று முத்துவிற்கும் மீனாவிற்கும் சந்தேகம் இருக்கிறது.
அது போல கிரிஷ்க்கு ரோகிணி தான் தன்னுடைய அம்மா என்ற உண்மை தெரியும் என்பதால் முத்து கிரிஷை வீட்டிற்கு கூட்டிட்டு வரும்போது ரோகினிக்கு தான் அடுத்த பிரச்சனை வர இருக்கிறது. எது எப்படியோ இனி அடுத்த வாரம் இந்த சீரியல் சூடு பிடிக்கப் போகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications