ரஜினி புத்திசாலி மட்டுமல்ல..! அப்பாவின் லென்ஸ் வழியாக தான் அவரை பார்த்தேன்.. ஸ்ருதிஹாசன் ஓபன்
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அப்போது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றி பல விஷயங்களை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசி இருக்கிறார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள கூலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டியில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்தது குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, ரஜினிகாந்த்தும் என்னுடைய தந்தை கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள். நான் கமல்ஹாசன் பொண்ணு என்பதால் அவரை சுற்றியே வளர்ந்து இருப்பேன் என்று மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் நானும் அவரை மக்கள் பார்க்கும் அதே லென்ஸ் வழியாகத்தான் பார்த்திருக்கிறேன்.

அதுபோல ரஜினி சாரையும் சூப்பர் ஸ்டார் ஆக தெரிந்திருக்கிறேன் அவரை என்னுடைய அப்பாவின் லென்ஸிலிருந்து பார்த்து தெரிந்து கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தொழில் ரீதியாக அவரை அறிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது. அவருடைய கேரக்டர் தனித்துவமாக இருக்கும். அவர் புத்திசாலித்தனமாகவும், கூர்மையாகவும் இருக்கிறார். ரஜினி சாரிடம் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும் இதை நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன்.
அதுபோல ரஜினி எல்லோரும் தன்னை பார்க்க வேண்டும், தன்னைப் பற்றிய பேச வேண்டும் என்ற ஈர்ப்பை கொண்டு அலைவது கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரு நல்ல எனர்ஜியை கொண்டு வருகிறார். ரஜினி சார் உடன் பணி புரிவது அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று ரஜினி குறித்து பெருமையாக ஸ்ருதிஹாசன் பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு அனைவராலும் பேசப்பட்டது ரஜினி கமல் தான். இவர்கள் இருவரும் ரசிகர்களும் ஒருவரை மீது ஒருவர் வசைப்பாடி வருவார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பு குறித்து பல இடங்களில் இருவருமே பேசி இருக்கிறார்கள். அதுபோல இப்பொழுது இருவருடைய குணாதிசயங்கள் குறித்தும் கமல்ஹாசனின் மகள் பேசியது இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்றி வருகிறது.
அதுபோல தமிழகம் ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்தும் பேசி இருந்தார். அதில் "திருமணம் என்ற எண்ணத்தால் நான் பயந்து போயிருக்கிறேன். தன்னுடைய அடையாளத்தை ஒரு சின்ன காகிதத்துடன் இணைக்க கூடாது என்று நினைக்கிறேன். திருமணம் சொல்லும் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால் அவற்றை சட்ட ஆவணமாக்கும் போது அது எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் திருமணம் செய்ய இருந்த நான் அந்த உறவின் புரிதல் மற்றும் இணக்கம் இல்லாத காரணத்தால் அது முடிவுக்கு வந்தது.

திருமணம் என்பது இரண்டு நபர்களை மட்டும் சார்ந்தது அல்ல. அது குழந்தைகள் எதிர்காலம், வாழ்நாள் பொறுப்பையும் பற்றியது என்று ஸ்ருதிஹாசன் பேசியிருக்கிறார். அதோடு அவர் மேலும் பேசும்போது நான் எப்போதும் ஒரு தாயாக இருக்க விரும்புகிறேன். ஆனால் பிறக்கும் குழந்தையை சிங்கிள் பேரண்டாக வளர்க்க விரும்பவில்லை. அதாவது தற்போதைய சூழ்நிலையில் ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் இரண்டு பெற்றோர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார். அதோடு எதிர்காலத்தில் ஒரு குழந்தையை தத்தெடுப்பது விருப்பமாக இருக்கலாம் என்று அந்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications