Thug Life: விமர்சனங்களுக்கு மத்தியில், கமல்ஹாசன் பற்றி மகள் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு.. அடடா என்ன பாசம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் கமல்ஹாசன் பற்றி ஒரு வார்த்தை சர்ச்சையாகி இருக்கிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தன்னுடைய தந்தை குறித்து நெகிழ்ச்சியாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். முன்னணி நடிகராகவும் உலக நாயகனாகவும் இதுவரைக்கும் பிரபலமாக இருந்த கமல்ஹாசன் இப்போது விண்வெளி நாயகன் என்ற பெயர் எடுத்திருக்கிறார். அவருடைய நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியதுதான் இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சர்ச்சை பேச்சு
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக கன்னடர்கள் பலர் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிட முடியாது என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் பேச்சுக்கு எதிராக கன்னட முதல்வர் சித்தராமையா, எடியூரப்பாவின் தம்பி என பலரும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார், கன்னட வரலாறு நீண்டது..., நெடியது என்று சித்த ராமையா பேசியிருந்தார்.
கமல்ஹாசன் பதிலடி
அதற்கு கமல் "நான் அறிந்த வரலாறை தான் நான் சொன்னேன். இதை மொழியியல் ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்களிடம் விட்டுவிடுவோம். அவர்களே சரியான பதில் தருவார்கள். ஆனாலும் அன்பு என்று மன்னிப்பு கேட்காது" என்று திட்டவட்டமாக பதில் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நாங்கள் கமல் படத்தை திரையிட விடமாட்டோம் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கமல்ஹாசன் தன்னுடைய முடிவில் இருந்து பின் வாங்காமல் உறுதியாக இருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் இன்ஸ்டா பதிவு
இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்ருதிஹாசன் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஸ்ருதிஹாசன் பாடிய "விண்வெளி நாயகா" பாடலை பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த பாடலை பாடியதும் கமல்ஹாசன் மேடையில் ஸ்ருதிஹாசனை பாராட்டியது குறித்தும் தந்தையாக தான் பெருமைப்படுவதாக பேசியதையும் அந்த வீடியோவில் இணைத்து இருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்
"என்ன ஒரு மரியாதை" என்று தன்னுடைய பதிவிற்கு ஸ்ருதிஹாசன் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். ஸ்ருதிஹாசனின் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், டைரக்டர், ப்ரொடியூசர் என்று பல முகங்களை கொண்டிருக்கிறார். அதோடு சினிமாவில் கலை மேதை என்றெல்லாம் பாராட்டப்பட்டு வருகிறார். அவருடைய மகளும் இப்போது தமிழ் சினிமாவில் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய தந்தையின் பாடலை பாடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications