பொட்டு அம்மன் படத்தில் மிரட்டிய சிஜோய் வர்கீஸ்.. பெத்தலகேம் குடும்ப யூனிட்டில் இப்படி மாறிட்டாரே!
சென்னை: சுமார் 25 வருஷங்களுக்கு முன்பு பொட்டு அம்மன் படம் பார்த்தவர்களுக்கு அந்த படத்தில் வந்த சில முகங்களை அவ்வளவு சீக்கிரம் மறந்து இருக்க முடியாது. அதிலும் மிரட்டலான தோற்றத்தில் வந்த நடிகர்களை இப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது நிவின்பாலி நடிப்பில் வெளியாகியிருக்கும் பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தை பார்க்கும் போது அந்த நடிகரை பார்த்து அட இவரா? என்று கேட்கும் அளவுக்கு மாற்றம் தெரிகிறது. அந்த நடிகர் தான் சீயோஸ் வர்கீஸ்.

மலையாள சினிமாவில் நடிப்பு
மலையாள சினிமாவில் பல வருஷங்களாக குணச்சித்திர மற்றும் வில்லத்தனமான கேரக்டரில் நடித்து வரும் சியோஸ் வர்கீஸ் இப்போது பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தில் மிகவும் இயல்பான குடும்பம் தலைவனாக வந்து கவனம் ஈர்த்திருக்கிறார். அவரை வில்லனாக பார்த்தவர்களுக்கு இப்போது இந்த படத்தில் வரும் தோற்றம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அன்று திரையில் பார்த்தால் மிரட்டலாக தெரிந்த அதே முகம் இன்று ஒரு சாதாரண குடும்பத்தில் நாம் பார்க்கும் மனிதராக போல மாறியிருக்கிறது.
அவருடைய உடல் மொழி, பேசும் விதம், முகபாவனைகள் என எல்லாமே கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி செட் ஆகிவிட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் நடிக்கிறார் என்பது தெரியாமல் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தை இயக்கியவர் கிரிஷ். நிவின்பாலி மமீதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் குடும்ப உறவுகளையும், காதலையும், காமெடியோடு சொல்லும் கதையாக இருக்கிறது.
ஓடிடி வெளியீடு
இந்த படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்றது. அதிகளவில் வசூல் பெற்று ஓடிடியில் வந்துவிட்டது. அதற்கு பிறகு வழக்கம் போல தமிழ் மக்கள் மத்தியில் இந்த படம் கவனம் பெற ஆரம்பித்து விட்டது. அதிலும் இவருடைய முகத்தை பார்த்து இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் சரியாக ஞாபகம் இல்லையே என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அதற்கு பிறகு தான் இவரை பற்றிய தேடல் தொடங்கி இருக்கிறது. அப்போதுதான் இவர் பொட்டு அம்மன் வில்லன் என்று தெரிய வந்திருக்கிறது.
பொட்டு அம்மன் வில்லன்
அவர் 90ஸ் கிட்ஸ்கள் பயப்படுற அளவுக்கு கோரப்பல், கொடூரமான பார்வை, முகத்தில் ஒரு அரக்கத்தனத்தோடு மிரட்டிய சிஜோய் இப்போ வீட்டு தலைவனாக பலருடைய கவனத்தை பெற்று இருக்கிறார். இவருடைய மாற்றத்தை பார்த்து அப்படியே தொடர்ந்து தமிழ் படம் பக்கம் வாங்க என்று ரசிகர்கள் இவருக்கு அழைப்பு விடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
