புலியூர் சரோஜா வீட்டுக்கு 400 சவரன் தங்க நகையுடன் போன சில்க் ஸ்மிதா.. இதுதான் கடைசி அக்கா!: பிரபலம்
சென்னை: 70, 80, 90களின் காலகட்டத்தில் டான்ஸ் முறையில் மாற்றம் கொண்டு வந்தவர் புலியூர் சரோஜா.. புதுபுது விஷயங்களை தன்னுடைய நடனத்தில் புகுத்தினார்.. நடனம் என்பது சரஸ்வதி என்பதால், அந்த நடனத்தை கற்று தருபவர்களையும் குருவாக கருதி, அவர்களின் காலை தொட்டு வணங்கியே நடிகர், நடிகைகள் ஆடுவார்கள் என்று பிரபல தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "3 தலைமுறையாக, தமிழ் சினிமாவின் ஆளுமையான நடன இயக்குநராக இருந்தவர் புலியூர் சரோஜா.. ஒருகாலத்தில் மிகவும் டெர்ரராக இருந்தவர்.. டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா என்றாலே, எல்லா நடிகர்களுமே பயப்படுவார்கள்..

காரணம், தான் கேட்கும் மூவ்மெண்ட் சரியாக வராவிவிட்டால், சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளை விடவே மாட்டார்.. அவர்களை ஆட வைத்து பெண்டு நிமித்திடுவார்.
70, 80, 90களின் காலகட்டத்தில் டான்ஸ் முறையில் மாற்றம் கொண்டு வந்தவர் புலியூர் சரோஜா.. புதுபுது விஷயங்களை தன்னுடைய நடனத்தில் புகுத்தினார்.. நடனம் என்பது சரஸ்வதி என்பதால், அந்த நடனத்தை கற்று தருபவர்களையும் குருவாக கருதி, அவர்களின் காலை தொட்டு வணங்கியே நடிகர், நடிகைகள் ஆடுவார்கள்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து ரஜினி, கமல், 90-களின் இறுதி வரைக்கும் புலியூர் சரோஜா நடனக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.
நேத்து ராத்திரி யம்மா
சகலகலா வல்லவன் படத்தில் கமல்ஹாசன் சில்க் ஸ்மிதாவின் "நேத்து ராத்திரி யம்மா" பாட்டு அன்று மிகப்பெரிய மாஸான ஹிட்டானது. அந்த நடன அமைப்பில் நளினம் இருக்கும், செக்ஸ் இருக்கும், ஆனால், விரசம் இருக்காது. அந்த அளவுக்கு நடன அமைப்பு சொல்லி தந்துள்ளார் புலியூர் சரோஜா.. அதேபோல அந்த பாட்டை பிக்சரைஸ் செய்யப்பட்ட விதமும் மிகவும் சிறப்பானது..
புலியூர் சரோஜாவே இதை பல பேட்டிகளில் சொல்லி உள்ளார்.. "சில்க்குக்கு பாட்டுக்கான ரியாக்ஷன்ஸ் எப்போதுமே குறைவாக இருக்கும்.. நேத்து ராத்திரி "யம்மா" என்று சொல்லும்போதும், ரியாக்ஷன் சரியாக சில்க்கிடமிருந்து வரவில்லை..
மாமியாரே, மருமகனே
உடனே கமல்ஹாசன் புலியூர் சரோஜாவிடம், "மாமியாரே! நீங்கள் டான்ஸ் சொல்லி தந்து எத்தனை பேரை பெண்ட் பெண்ட் எடுத்திருக்கீங்க, ஆனால் இந்த பொண்ணு உங்களை பெண்ட் எடுக்கும் பாருங்க" என்று கிண்டலாக சொன்னாராம்.
உடனே புலியூர் சரோஜா கமலிடம், "மருமகனே, கவலைப்படாதீங்க, சில்க்கிடமிருந்து எப்படி வேலை வாங்குறேன் பாருங்க. அந்த ரியாக்ஷனை வாங்கிடறேன்" என்று சொல்லி உள்ளர்..
பிறகு புலியூர் சரோஜா, சில்க் பக்கத்தில் லோ ஆங்கிளில் மண்டிபோட்டு உட்கார்ந்து கொண்டார்.. .கேமராவில் தெரியாதபடி மறைந்து கொண்டு, "எம்மா" என்று வார்த்தை வரும்போது சில்க் சுமிதாவின் வயிற்றில் கிள்ளினாராம்..
வலி தாங்காமல் கத்திய சில்க் ஸ்மிதா
உடனே சில்க் வலி தாங்காமல் "யம்மா" என்றாராம்.. இப்படித்தான் அந்த ரியாக்ஷனை புலியூர் சரோஜா வரவழைத்துள்ளார். அதிலும் அந்த ரியாக்ஷன் டைட் க்ளோஸ்-அப்பில் எடுக்கப்பட்டது... சில்க் சுமிதா தன்னுடைய நடிப்பில் கொடுத்ததிலேயே அதுதான் பெஸ்ட் ரியாக்ஷனாக இன்றும் உள்ளது.." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
சில்க்கிடம் நெருங்கி பழகியவர் புலியூர் சரோஜா.. ஒரு வெள்ளந்தியான பொண்ணு சில்க்.. அன்று சில்க்கிடம் மயங்காத நபரே கிடையாது.. இன்றுவரை சில்க்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. ஆளுமையுடன் அன்று தமிழ் சினிமாவில் இருந்தவர். புலியூர் சரோஜாவை அக்கா என்றுதான் பிரியத்துடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் சில்க்..
400 சவரன் தங்க நகைகள்
சில்க் இறப்பதற்கு ஒருநாள் முன்னாடி, புலியூர் சரோஜா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. கையோடு தன்னிடமிருந்த 300, 400 சவரன் நகைகளை கொண்டு சென்றுள்ளார்..
அதை புலியூர் சரோஜாவிடம் காட்டி, "அக்கா, நான் கல்யாணம் செய்து கொள்ள போறேன், நீங்கதான் என் கல்யாணத்துக்கு தாலி எடுத்து தரணும்" என்று சொல்லி, மாப்பிள்ளை பெயரையும் சில்க் அவரிடம் சொல்லி உள்ளார்.. ஆனால், அந்த மாப்பிள்ளை பெயரை புலியூர் சரோஜா எந்த பேட்டியிலும் சொன்னதில்லை.
புலியூர் சரோஜாவை கட்டிப்பிடித்த சில்க்
சில்க் கல்யாண விஷயத்தை சொன்னதுமே புலியூர் சரோஜா, "சரி சுமிதா, நானே உன்னுடைய கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். முதல்ல நகைகளை கொண்டு போய் வீட்டில் வை.. இப்படி எல்லா இடத்திலும் எடுத்துட்டு போய் காட்டக்கூடாது, நீ அதுவரைக்கும் யார் கிட்டயும் எதுவும் பேசாதே" என்று அறிவுரை சொல்லிவிட்டு, திருப்பதிக்கு ஒரு படத்தின் ஷூட்டிங் கிளம்ப தயாரானார் புலியூர் சரோஜா.
உடனே சில்க், புலியூர் சரோஜாவின் கையைப் பிடித்துக்கொண்டு, "அக்கா, நீங்கள் என்னை விட்டுட்டு ரொம்ப தூரத்துக்கு போற மாதிரி இருக்குக்கா" என்று மனவருத்தத்துடன் சொல்லி உள்ளார்..
இதுதான் கடைசியாக இருக்கடம்
அதுக்கு புலியூர் சரோஜா, "என்னடா நீ? 4 மணி நேரத்துல திருப்பதிக்கு போயிடுவேன். 2 நாள் சாங் ஷூட்டிங் எடுத்துட்டு, உடனே இங்கே வரப் போறேன். நீ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தை செய்து கொடுக்க போறேன். அப்பறம் என்ன?" என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்..
இதைக்கேட்டதும் சில்க் சுமிதா, மறுபடியும் புலியூர் சரோஜாவை கட்டிப்பிடித்து முத்தம் தந்துள்ளார்.. "என்ன சுமிதா, ஏன் இப்படி திடீர்னு மூட் அவுட் ஆயிட்டே? என்னமோ மாதிரி பேசுற? என்று கேட்கவும், அதற்கு சில்க் சுமிதா, "ஒன்னுமில்லக்கா, நான் அநேகமா கடைசியா உங்களை பார்க்கறது இதுவாகத்தான் இருக்கும்னு தோணுதுக்கா" என்று சொல்லியிருக்கார்.
தெலுங்கு நியூஸ்பேப்பர்
"என்னமா ஊருக்கு கிளம்பிட்டிருக்கேன்.. இப்ப வந்து நீ அபசகுனமா கடைசியா பார்க்கிறதுன்னு பேசுறே? திருப்பதிக்கு போயிட்டு வர்ற வரைக்கும் 2 நாள் அக்கா இல்லாம இருக்க மாட்டியா நீ" என்று சொல்லிவிட்டுப் புலியூர் சரோஜா கிளம்பி சென்றுவிட்டார்.
ஷூட்டிங் முடிந்து, திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு அடிவாரத்திற்கு வந்துள்ளார் புலியூர் சரோஜா.. அங்கே ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் காபி சாப்பிடும்போதுதான், அங்கிருந்த தெலுங்கு நியூஸ் பேப்பரில் "சில்க் சுமிதா தற்கொலை செய்து இறந்துவிட்டார்" என்ற செய்தியைப் பார்த்து புலியூர் சரோஜா அதிர்ச்சி அடைந்துள்ளார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications